flashvortex

Thursday, February 3, 2011

ஈழப் போராட்ட பின்னடைவுக்கு இந்தியாவே முதல் காரணம்


ஈழப் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து போராடியவர்களில் நீங்களும் ஒருவர் மே 18 இற்கு
பிறகு எல்லாப் போராட்டங்களும் வீண் என்ற அயர்ச்சி ஏற்பட்டதா?
தாமரை :போரோடு முடிந்துவிட வில்லையே ஈழத்து கொடுமைகள், சரண் அடைந்தவர்கள்,சித்திரவதை,பாலியல்வதை,
கொடூர கொலைகள்,தமிழர் நிலம் சிங்கள மயமாக்கல் என்று இன்னமும் தொடர்கின்றனவே .புண்பட்டு கிடந்தால் வேலைக்கு ஆகாது
என்று துள்ளி எழுந்து இலங்கைப் புறக்கணிப்பு போர்க் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவது தொடர்பாக முன்னிலும் அதிகமாகவே வேலை
செய்கின்றேன் ஈழம் ...என் நெஞ்சில் ஆறாத,மாறாத காயம்!''
ஈழப் பிரச்சனையில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் நிலைப்பாடு குறித்த உங்கள் கருத்து என்ன?
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த பிணக் குவியல்களின் மீது ஏறி வெறியாட்டம் போட்ட காங்கிரசின் குருதிக் கரை படிந்த
கையை இறுகப் பற்றி ,அதை இழந்துவிட குடாது என துடிப்பவர் கருணாநிதி .அந்த கையை எப்படியாவது கைப்பற்ற துடிப்பவர் ஜெயலலிதா.
'ஆமாண்டா,அப்படித்தானே செய்வேன்,உன்னால முடிஞ்சத பாரு'என்று தெனாவட்டாக காட்டி கொடுப்பார் ஒருவர்.
ஐயகோ ' என் செய்வேன், அழிகிறதே என் தமிழினமே !'என்று அழுது கொண்டே காட்டி கொடுப்பவர் இன்னொருவர் .
இருவருக்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு ? சாயலில் வேறுபட்டாலும் ,சாரத்தில் இருவரும் ஒன்று தான்.
ஈழப் போராட்டத்தின் தோல்வி அல்லது பின்னடைவுக்கு எது அல்லது யார் காரணம் என்று கருதுகிறிர்கள்?
'சிங்களவருக்கு' ஆயுதம் கொடுத்து உலக நாடுகள் தலையிட்டு காப்பற்றி விடாமல் தடுத்து,வேவு பார்த்து வழிகாட்டி கூட்டு சதி செய்து
இனப்படுகொலைப் பூரி பின்னால் இருந்து நடத்திய இந்திய அரசே முதற்பெரும் காரணம்! எப்பாடுபட்டாவது இதைக் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பை கை கழுவி விட்டு, கபட நாடகம் நடத்தி,இனப் படுகொலைக்கு துணை போன தமிழக அரசு இரண்டாவது காரணம்!
இதை வெளிச்சம் போட்டு காட்டி வீதிக்கு வந்து போராடி இனப்படுகொலையை தடுக்காமல் போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று பொன் மொழியை உதிர்த்துவிட்ட எதிர்க்கட்சி தலைவி ஜெயலலிதா, மூன்றாவது காரணம்!
இந்த நாடகங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் அறிந்துகொண்ட பிறகு, கொதித் தெழுந்து போராடிக் தம் தொப்புள் கொடி உறவுகளை காப்பாற்றாமல்,கையை பிசைந்து முகத்தை திருப்பிகொண்ட tamilaga மக்கள் naangaavathu காரணம் !''

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons