flashvortex

Saturday, January 21, 2012

உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் மெக்ஸிக்கோவில் (பட இணைப்பு) _


   உலகின் மிகப்பெரிய தொங்கு பாலத்தை நிர்மாணித்து மெக்ஸிக்கோ கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துக் கொண்டது. 

1000 மீற்றர் நீளமானதும் 400 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்டதுமான இப்பாலம் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மையப் பரப்பு பரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தின் பரப்புடன் பொருந்துகிறது.


பல மில்லியன் பவுண்ஸ் செலவில் உருவான இப்பாலம் மெக்ஸிக்கோவின் சியரா மத்ரே ஒக்ஸிடென்டல் மலையின் ஆழமான இடுக்குகளின் வழியாக ஊடறுத்துச் செல்கிறது. இதை உருவாக்க 4 ஆண்டுகள் எடுத்துள்ளது.

1810ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிடமிருந்து மெக்ஸிக்கோ சுதந்திரம் பெற்ற இருநூறு ஆண்டுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

மெக்ஸிக்கோ ஜனாதிபதி பெலிப்பே கால்டெரொன் இது குறித்து தெரிவிக்கையில், "முன்னெப்போதும் இல்லாத வகையில் வடக்கு மெக்ஸிக்கோ மக்கள் இதன் மூலம் ஒன்றுபடப் போகின்றனர்" என்றார்.







0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons