
உலகெங்கும் எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு தேவைப்படுகின்ற பணத்தேவை குறித்து ஐநாவில் நடந்த மாநாடு ஒன்றில் உலகத் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்.
எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச் ஐ வி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு முப்பதாண்டுகள் ஆனதை நினைவு கூறுமுகமாக நடக்கும் இந்த மாநாட்டில் முப்பது நாடுகளின் அதிபர்களும் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
உலகிலேயே தென்னாபிரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்டிருக்கும் நைஜீரியாவின் அதிபரான குட்லக் ஜொனார்த்தன் அவர்கள் இந்த போராட்டத்துக்கு போதுமான நிதி என்பது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.
மாநாட்டில் உரையாற்றிய ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் எயிட்ஸை ஒழிப்பதற்கான திட்டத்துக்கு ஐநா தொடர்ந்தும் தனது பூரண ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தார்,
அதேவேளை அங்கு உரையாற்ரிய ஐநாவின் எயிட்ஸ் ஒழிப்புச் செயற்திட்டத்தின் இயக்குனரான மைக்கல் சிடிபி அவர்கள், எயிட்ஸுக்கும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் உள்ள தொடர்புகள் இல்லாது ஒழிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.




9:54 PM
jana
Posted in: 
