skip to main |
skip to sidebar
இந்தியா, சீனா மற்றும் துருக்கி நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவைக் குறைத்துக் கொள்ளும்படி மிகவும் அழுத்தமாக வெளிப்படையாக அமெரிக்கா கோரியுள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளிடம் பேசி, இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஜனாதிபதி பஸார் அல் - அஸாட் தலைமையிலான சிரியா அரசாங்க நிர்வாகத்தின் கீழ் அங்கு மனித உரிமை மீறல் அதிகரித்துள்ளதாகவும் அதற்கு கண்டனம் தெரிவித்தும் ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.சிரியாவுக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து 37 நாடுகள் வாக்களித்ததுடன் ரஸ்யா, சீனா, கியூபா ஆகிய மூன்று நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்று, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம்: கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி, தங்களிடம் நேரில் அளித்த மனுவிலும், அதே மாதம் 25ம் தேதி அனுப்பிய கடிதத்திலும், "இலங்கை தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள் குறித்து, ஐ.நா., சபையின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர் குற்றவாளிகள் என்று அறிவிக்கச் செய்ய வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்கள் மீள்குடியேறச் செய்து, மறுவாழ்வு கிடைக்கச் செய்து, மரியாதையுடனும், சிங்களர்களுக்கு இணையாக சம உரிமையுடனும் நடத்தப்படாவிட்டால், மற்ற நாடுகளுடன் சேர்ந்து இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தைக் குறிப்பிட்டிருந்தேன்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறீலங்கா தொடர்பிலான முக்கியமானதொரு உரை இடம்பெறும் பெறக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்ற நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரைகளை அடிப்படையாக வைத்து இந்த விவாதங்கள் இடம்பெறவுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.இன்று காலை 9 மணியளவில் சிரியா நிலைமை தொடர்பாக இரண்டு மணி நேர அவசர விவாதம் ஒன்று இடம்பெறும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது போர்க்குற்றம் சுமத்தி அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தினால் நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு ஒன்றின் ஜனாதிபதி என்பதாலும் அதனால் அவருக்கே உரிய சிறப்புரிமை மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கம் அறிவுறுத்தியதையடுத்தே மேற்படி வழக்கினை விசாரணைக்குட்படுத்தாத வகையில் தள்ளுபடி செய்வதாக அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி கொலீன் கொலர் கொடலி (Colleen Kollar-Kotelly) தெரிவித்துள்ளார்.