flashvortex

Friday, March 2, 2012

அணு விபத்தை கையாளும் நிலையில் ஜப்பான் இல்லை

ஜப்பானில் கடந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தின் காரணமாக ஃபுக்குஷிமாவில் இருந்த அணுமின் நிலையம் செயலிழந்த வேளையில், அந்த மின் நிலையத்தின் அதிகாரிகளும், அரசும் பீதியடைந்தனர் என, அந்த பெரும் விபத்து குறித்த ஒரு சுயாதீனமான அறிக்கையை தயாரித்துள்ளவர்கள் கூறியுள்ளனர்.

பிரிட்டிஷ் இறக்குமதி வேண்டாம் என்கிறது ஆர்ஜன்டீனா'

ஃபாக்லாண்ட் தீவுகள் குறித்த சர்ச்சை காரணமாக பிரிட்டனில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று ஆர்ஜன்டீனாவின் பெரிய நிறுவனங்களை ஆர்ஜடீனா அரசாங்கம் கேட்டிருப்பதாக அந்த நாட்டின் அரச ஊடகம் கூறியிருக்கிறது.
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்பப்படும் பொருட்களுக்கு பதிலாக வேறு நாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்யுமாறு அந்த நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகளை ஆர்ஜன்டீனாவின் தொழில்துறை அமைச்சர் கேட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

2020 இல் பூமிக்குக் காத்திருக்கும் ஆபத்து!: விஞ்ஞானிகள் எச்சரிக்கை _

  பூமிக்கு ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விஞ்ஞானிகள் பலமுறை எச்சரித்துள்ளனர்.

இவற்றில் சில அவர்களின் கணிப்பின் படி நடந்துள்ளதுடன், பல நடக்காமலும் போயுள்ளன.

எனினும் இத்தகைய எதிர்வுகூறல்கள் லேசான பயத்தை நிச்சயமாக வரவழைக்கக் கூடியன.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டில் பூமிக்கு ஏற்படக்கூடிய ஆபத்தொன்று தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசின் இரட்டை வேடத்தின் அர்த்தம் என்ன?: கிரியெல்ல _

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம் என ஜெனீவாவில் உறுதி மொழி வழங்கும் அரசாங்கம் உள்நாட்டில் இதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது. இந்த இரட்டை வேடத்தின் அர்த்தம் தான் என்ன? என கேள்வியெழுப்பும் ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல, உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதில்லை என்பதால் இந்தியாவும் சர்வதேசமும் இம்முறை அரசாங்கத்தை நம்பத் தயாராக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார். 

ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்ட கட்டிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பைபிள் பிரதிகள் _

அல்கொய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்ட கட்டடத்திலிருந்து இரு வேதாகம பிரதிகளை பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பின்லேடன் தங்கியிருந்த கட்டிடத்தை தகர்க்கும் நடவடிக்கையின் போதே மேற்படி மறைத்து வைக்கப்பட்டிருந்த வேதாகமப் பிரதிகள் கண்டெடுக்கப்பட்டன. 

கணவன் மனைவி பாதை மாற காரணம்,மனப்பொருத்தம் இல்லாமை:

Paristamil
 ஜாதக பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து சேர்த்து வைப்பதுடன் பெற்றோரின் கடமை முடிந்துவிடுகிறது. வேறுபட்ட இரு குடும்ப பாரம்பரியங்களில் , சூழ்நிலைகளில் வாழ்ந்தவர்கள் இனி புதியதொரு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டாக வேண்டும். புது சூழல் , புது உறவுகள், புது பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் அனுசரித்து பழகி கொள்வார்கள். அதன் பின் பல வருடங்கள் இணைந்து வாழ்ந்து வந்தாலும் அவர்கள் புரிதலுடன் தான் வாழ்கிறார்கள் என்று முடிவிற்கு வந்துவிட முடியாது. பல உட்பூசல்கள் நீருபூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருப்பது வெளியே பெரும்பாலும் தெரிவதில்லை.
 

நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை துரிதப்படுத்துமாறு அமெரிக்கா கோரிக்கை

சிறீலங்கா தனக்கான காலத்தை நழுவ விட்டுள்ளதாக அமெரிக்காவின் பொதுமக்கள் காப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான செயலர் மரியா ஒட்ரோ தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்டர்போல் மூலம் முஷாரப்பை பிடிக்க பாக்., உள்துறை அனுமதி

பாக்.,முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப்பைத் தேடுவதற்காக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு ஏஜன்சி, இன்டர்போலை நாடுவதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 
பெனசிர் கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரது சொத்துக்கள்முடக்கப்பட்டுள்ளன. தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார். 

விரைவில் சிரியா செல்லவுள்ளார் கோபி அனான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் விரைவில் சிரியாவிற்கு செல்லவுள்ளார் என தெரியவருகின்றது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது 7500 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் அண்மையில் ஷெல் தாக்குதலில் இரு ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டனர்.

உலகின் பழமைவாய்ந்த அணுமின் நிலையத்தை மூடியது இங்கிலாந்து

1960 ஆண்டு முதல் 44 ஆண்டுகளாக இயங்கிவந்த உலகின் மிகப் பழமைவாய்ந்த அணுமின் நிலையத்தை மூடியுள்ளது இங்கிலாந்து.
எனினும் அதற்கு அருகில் மற்றுமொரு புதிய அணுமின் நிலையத்தின் கட்டுமானப்பணிகளையும் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்டர்போல் மூலம் முஷாரப்பை பிடிக்க பாக்., உள்துறை அனுமதி

பாக்.,முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப்பைத் தேடுவதற்காக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு ஏஜன்சி, இன்டர்போலை நாடுவதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பெனசிர் கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரது சொத்துக்கள்முடக்கப்பட்டுள்ளன.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons