ஹோபர்ட்டில் நடந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கோஹ்லியின் அபார சதத்துடன் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றியொன்றை பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 320 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் டில்சான் சங்கக்கார ஆகியோர் முறையே 160, 105 ஓட்டங்களை பெற்றனர்.
40 ஓவரில் 321 ஓட்டங்கள் எடுத்தால் மாத்திரமே இறுதிப்போட்டிக்கு இந்திய தகுதி பெற முடியும் என்ற சவால் ஏற்பட்டது.
இந்த இமாலய ஓட்ட எண்ணிக்கையை எட்ட இந்திய அணியின் ஆரம்ப வீரர்கள் சேவாக் – சச்சின் அதிரடியாக விளையாடினர்.
16 பந்தில் 30 ஓட்டங்கள் எடுத்த சேவாக் மஹ்ரூப் பந்தில் ஆட்டம் இழந்தார். இதில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் அடக்கம்.
பின்னர் சச்சினும் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழந்தார். 30 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்த அவர், 4 பவுண்டரி விளாசினார். இருந்தாலும் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது.
கம்பீர் – கோஹ்லி இணை இலங்கை பந்துவீச்சை சிதறடித்தனர். 64 பந்தில் 63 ஓட்டங்கள் எடுத்திருந்த கம்பீர் அதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கோஹ்லி – ரெய்னா அதிரடியாக துடுப்பெடுத்தாடினர். 86 பந்தில் 133 ஓட்டங்களை குவித்த கோஹ்லி, 16 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசினார். ரெய்னா 24 பந்தில் 40 ஓட்டங்களை எடுத்தார். இதில் 3 பவுண்டரி, ஒரு சிச்கர் அடக்கம்.
கோஹ்லி – ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை எடுத்து சாதனை வெற்றp பெற்றது. இதன் மூலம் 15 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. ஆட்ட நாயகனாக கோஹ்லி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்னும் இலங்கை அணிக்கு ஒரு லீக் போட்டி உள்ளது. அவுஸ்தி;ரேலியா சந்திக்கும் இலங்கை அணி இதில் வெற்றp பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இல்லையென்றால் இந்தியா இறுதிக்கு சென்றுவிடும்.




6:53 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment