flashvortex

வேறு

தூக்கத்தை தொலைத்துவிட்டேனடி
என்னுள் தாக்கத்தை விதைத்துவிட்டாயடி
ஏழு ஜென்மங்கள்
உயிர்களுக்கு-
எனக்கு மட்டும் விதிவிலக்கு: ஆம் -
......உன் ஒவ்வொரு சிரிப்பிலும்
உயிரிழக்கிறேனடி...
இன்று மண்ணில் அவதரித்த என் இனிய உறவினால் பெருமை கொள்கிறது திகதியும் திங்களும். இன்றைய இனிய நன்னாளில் பெருமை கொண்டு அவைகளுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன் இறைவன் அருள் கொண்டு பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என்று

கனவுகளை காப்பாற்ற

கனவுகளே காணத் தெரியாமல் இருந்த காலமுமுண்டு.
ஆசை துகள்களாக ஆரம்பித்து
கனவுகளாக உருவெடுத்தது.
கனவுகள் காலப் போக்கில்
லட்சியங்களாக மாறிக்கொண்டது.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின்
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது.
.
.
.
பல இன்பங்களை விட்டுக்கொடுத்து
எண்ணங்களை மாற்றியமைத்து
உடலை காயப்படுத்தி
உணர்வுகளை ஒருமுகப்படுத்தி
சொந்தங்களை தூரதள்ளி
நம்பிக்கையை தன்வசப்படுத்தி
என் சிந்தனைக்கு மட்டும் மதிப்பளித்து
வளர்ந்த பாதைக்கு முற்றுப்புள்ளியிட்டு
.
.
.
மீண்டும் விதையாகி, வேருன்றி,
கிளையிடத் துவங்கிவிட்டேன்...

 

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons