flashvortex

Tuesday, January 10, 2012

இந்திய அணியில் தோல்விக்கு காரணம் ஹர்பஜன் சிங் இல்லாமையே : வாசிம் அக்ரம்

Paristamilஇந்திய அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இல்லாததுதான் பெரிய குறை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்விடைந்துள்ளது.
துடுப்பாட்டம், பந்துவீச்சு என எந்த நிலையும் இந்திய வீரர்களால் சாதிக்க முடியவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவரை சேர்த்தது சரியில்லை, இவரை நீக்கியது தவறு, கேப்டன் தோனிதான் சரியில்லை, மூத்த வீரர்களால் பலனில்லை என்று பலதரப்பட்ட கருத்துகள் எழுந்துள்ளன.

திருகோணமலையில் இனம் காணப்பட்ட அரச பரம்பரை!

Paristamilமஹா வசம்சத்தில் குறிப்பிடபடாத அரச பரம்பரை தொடர்பான கல்வெட்டு ஒன்று திருகோணமலை கந்தன்கரு பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  வில்கம்வெஹர பிரதேசத்தில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில், உள்ள காட்டு பகுதியில்,  இந்த கல்வெட்டு கிடைத்துள்ளது.
 

இரத்மலானை இந்துக் கல்லூரியின் அதிபருக்கான பனிப்போர் - ஐனாதிபதி தலையீட்டு தீர்வு

Paristamilகடந்த சில தினங்களாக கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரியில் நிலவி வந்த அதிபருக்கான போட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அடிதடியில் முடிவுற்ற சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இக் கல்லாரியின் அதிபராக இருந்த திரு.மன்மதராஐாவின் பதவி விலகலை தொடர்ந்து அவரின் மனைவியான திருமதி.மன்மதராசா தற்காலிகமாக அதிபராக நியமனம் பெற்றார்.

மாகாணசபைகளுக்கு கொள்கையளவில் பொலிஸ் அதிகாரம் வழங்க அரசு தயார்

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வரையறுக்கப்பட்ட அளவில் வழங்குவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களின் போது ஆராய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவையின் பேச்சாளர் ஹகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் சில வரையறைகளுக்குள் செல்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை முழுமையாக வழங்குவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்ட சில பகுதி அதிகாரங்களை வழங்குவது பிரச்சினையாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons