flashvortex

Wednesday, December 21, 2011

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கட்சித் தலைவரானார்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நீண்டகாலம் கட்சியின் தலைவர் ரணிலுக்கு எதிரான பிரசாரங்கள் கட்சிக்குள் வலுத்து வந்த நிலையிலேயே தலைவர், துணைத் தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு இன்று திங்கட் கிழமை தேர்தல் நடத்தப்பட்டது.

ரணிலை எதிர்த்துப் போட்டியிட்ட கரு ஜயசூரியவும் தேசிய அமைப்பாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகரவும் தோல்வி கண்டுவிட்டார்கள் என்று திங்கட்கிழமை மாலை தொலைபேசிகளுக்கு குறுஞ் செய்திகள் வரத்தொடங்கியது தான் தாமதம், அதுவரை கட்சித் தலைமையகமான ஸ்ரீகோத்தவுக்கு முன்பாக ரணில் எதிர்ப்பு கோஷங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் வன்முறைகளில் ஈடுபடத் தொடங்கினர்.
அதன்பின்னர் பொலிசார் வரவழைக்கப்பட்டதும், ரணில் அணியினரை எதிர்த்துப் போட்டியிட்ட கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரின் வேண்டுகோளின் பின்னரே அங்கிருந்து கூட்டத்தை கலைக்க முடிந்தது.

யாழ் நகரில் 140 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு!


யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளின் போது 140 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து, இந்த ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டதாக ஸ்ரீ ஜயவர்த்னபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் கலாநிதி பிரசாந்த பந்துல மண்டாவல தெரிவித்தார்.

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட மிதக்கும் உணவகம்


உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் கொழும்பு பேரை வாவியில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது மிதக்கும் உணவகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் திறந்துவைத்தார். சினமன் லேக் ஹோட்டலின் பூரண அனுசரணையூடன் இந்த மிதக்கும் உணவகம் மிகவூம் அழகான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.


 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons