flashvortex

Saturday, October 29, 2011

டுனீசியாவில் நடந்த முதல் தேர்தலில் தடை செய்யப்பட்ட கட்சி வெற்றி


Paristamilஆப்ரிக்க நாடான டுனீசியாவில் நடந்த முதல் தேர்தலில், என்னஹ்தா கட்சி கணிசமான இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.அரபு புரட்சிகளுக்கு வித்திட்ட டுனீசியாவில், அரசியல் அமைப்பு சபைக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், பல கட்சிகள் போட்டியிட்டன. பென் அலி அதிபராக இருந்த போது தடை செய்யப்பட்ட என்னஹ்தா கட்சியும் இதில் போட்டியிட்டது.தேர்தலின் அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிப்புகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. அதில், மொத்தம் உள்ள 217 இடங்களில் என்னஹ்தா, 90 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து, குடியரசு காங்கிரஸ் கட்சி 30 இடங்களையும், இடதுசாரியான எட்டகடோல் கட்சி 21 இடங்களையும் பிடித்துள்ளன.இஸ்லாமிய கட்சியான என்னஹ்தா வெற்றி பெற்றாலும், அரசியல் அமைப்பு சபையை அமைக்க, இன்னும் கூடுதலான இடங்கள் தேவைப்படுவதால், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் பேச்சு நடத்தி வருகிறது.

8,000 கி.மீ.வரை, பாயும் ஏவுகணை: ரஷ்யா சாதனை!


Paristamil
அணு ஆயுதங்களைத் தாங்கி, 8,000 கி.மீ., தூரம் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் புதிய ஏவுகணையை, ரஷ்யா நேற்று வெற்றிகரமாகப் பரிசோதித்தது.ரஷ்யாவின் "புலாவா' ஏவுகணை, 37 டன் எடை கொண்டது. கண்டத்துக்குள் 8,000 கி.மீ., தொலைவில் இருக்கும் இலக்கைத் தாக்கும் இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக் கூடியது.ரஷ்யாவின் வடதுருவத்தில் உள்ள வெள்ளைக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, "யூரி டோல்கோருக்கி' என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, நேற்று இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons