flashvortex

Saturday, November 26, 2011

7ம் அறிவு வில்லன் JOHNY TRI NGUYEN எப்படித் தெரிவு செய்யப்பட்டான்?


‘ஏழாம் அறிவு’ படம் வெளியானதும் அப்படத்தில் நடித்த JOHNY TRI NGUYEN பற்றி தான் பேச்சாக இருந்தது. அவரது மிரட்டும் கண் பார்வை, அனல் பறக்கும் சண்டை காட்சிகள் என அனைத்து விதத்திலும் ரசிகர்களைக் கவர்ந்தார். சிறு குழந்தைககளுக்கும் கூட அவரை பிடித்துப் போனது.

‘ஏழாம் அறிவு’ படத்தில் நடிக்க இவரை எங்கு தேடி பிடித்தார்கள், ஒப்பந்தம் செய்தது எப்படி என்று விசாரித்த போது பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் நமக்கு கிடைத்தன. அத்தகவல்கள் இதோ
‘ஏழாம் அறிவு’ படத்தில் JOHNY TRI NGUYEN நடிக்க முதற்காரணமாக இருந்தவர் சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன்.
பீட்டர் ஹெய்ன் ‘அந்நியன்’ படத்தில் செய்த சண்டை காட்சிகளை பார்த்து அவரது பேஸ்ஃபுக் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் JOHNY TRI NGUYEN. அப்படத்தில் வரும் SLOW MOTION சண்டைக்காட்சிக்களில் சுமார் 60 சண்டை கலைஞர்களை வைத்து படமாக்கினார்கள்.
இந்த காட்சியை பார்த்த JOHNY TRI NGUYEN பீட்டர் ஹெய்னிடம் நாங்கள் ஹாலிவுட்டில் இந்த சண்டைக்காட்சிகளை எல்லாம் 3Dல் தான் படமாக்குவோம் ஆனால் நீங்கள் எப்படி படமாக்கினீர்கள் என்று ஆச்சர்யப்பட்டு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் கிடைத்த நட்பு நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். JOHNY TRI NGUYEN வியட்நாமில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலானவர்.
உலகம் முழுவதும் உள்ள சண்டை இயக்குனர்களுக்கிடையே கொடுக்கப்படும் TAURAS STUNT AWARD என்னும் விருதினை பீட்டர் ஹெய்னுக்கு 2ம் முறை சிபாரிசு செய்தது JOHNY TRI NGUYEN தான்.
‘ஏழாம் அறிவு’ படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் பீட்டர் ஹெய்னிடம் கூறியவுடன் முதலில் வில்லனாக நடிக்க சொல்லி கேட்டது புகழ்பெற்ற JET LI -யிடம் தான். ஆனால் அவரோ கதை சீன நாட்டிற்கு எதிராக இருப்பதால் நடிக்க முடியாது என்று விலகி விட்டாராம்.
JETLI நடிக்க முடியாது என்ற கூறியதால் அடுத்த நிமிடமே JOHNY TRI NGUYEN-வை ‘ஏழாம் அறிவு’ படத்தின் வில்லனாக்கி விட்டார் பீட்டர் ஹெய்ன். இந்த சண்டைக் கலைஞர்களின் நட்பு குறித்து பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் மற்ற ஸ்டண்ட் கலைஞர்கள்.

அமெரிக்க - கூட்டமைப்பின் உள்ளார்ந்த ரகசியம் அம்பலம்? : சீற்றத்தில் இலங்கை


அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளுக்கு சென்று தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கேட்டு பல சுற்று பேச்சுக்களை நடாத்தியிருந்தனர்.

அந்த வகையில் கூட்டமைப்பினரினால், அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒக்டோபர் மாத பிற்பகுதியில் அமெரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிற்குச் சென்று அங்கு உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர். அத்துடன், இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவை தொடர்பிலான அரசின் செயற்பாடுகள் என்பன பற்றிக் குறிப்பிட்டு விசேட அறிக்கை ஒன்றையும் கூட்டமைப்பினர் ராஜாங்கத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்த அறிக்கையின் ஒரு பிரதியே இப்போது இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'அரசைக் கடுமையாக விமர்சித்து, தவறான தகவல்களை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் உள்ளடக்கம்'' அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்திருப்பதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி முயற்சிகளுக்கான பேச்சுகள் ஒருபுறம் நடைபெறும் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான செயற்பாடுகள் பெரும் அதிருப்தி தருவதாக அமைந்துள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons