புகையிரததிக்குள் பயணம் செய்யும் பொது வாலிபர் கூட்டம் அத்தோடு சிறு பிள்ளைகளும் புகையிரதத்துக்குள் வெறுமையான இருக்கைகள்
இருப்பினும் அவதானமின்றி மிதிபலகையில் பயணம் செய்வதால் உயிர் சேதங்கள் பல கடந்த வாரத்திற்குள் நடந்திருகின்றது என இலங்கை புகையிரத சேவை அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்தார் .மேலும் அவர் தெரிவிக்கையில் ,
இவ்வாறு மிதி பலகையில் அவதானமின்றி பயணம் செய்வதால் புகையிரத பாதையில் இரு பக்கமும் உள்ள பாலத்திலும் ,
புகையிரத ஸ்தானத்திலுள்ள மேடையிலும் மோதுவதன் காரணமாக ஏற்படும் ஆபத்துக்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் ,நேற்று காலிரண்டையும் வெளியே போட்டு மிதிபலகையில் அமர்ந்து போன ஒருவர் அலவதுபிடியவில் உள்ள புகையிரத ஸ்தானத்தில் இருக்கும் மேடையில் மோதி இறந்து விட்டதாக அவர் தெரிவித்தார் .
போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமையும், புகையிரத உத்தியோகஸ்தரான எ.ஜி.மானாம அவர்களும், அதிகாரிகளினதும் ஆலோசனை கருதி பெறுமதியான வாலிப வாழ்கையை துளைப்பதை தவிர்த்து கொள்வதற்க்கு கவனயினமாக மிதிபலகையில் பயணம் செய்வதை தவிர்த்து கொள்ளுமாறு புகையிரத போக்குவரத்து அமைச்சு பொது மக்களிடம் கேட்டு கொள்கின்றது




10:30 PM
jana

