flashvortex

Tuesday, November 29, 2011

சர்வதேச எயிட்ஸ் தினம் இன்று



சர்வதேச எயிட்ஸ் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

1988ஆம் ஆண்டு எயிட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் உலக எயிட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கரு முதலில் உருவானது.

அதனையடுத்து உலகை அச்சுறுத்தி வரும் எயிட்ஸ் நோயின் விளைவுகள் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.எயிட்ஸ் நோயின் அறிகுறிகள் முதன் முதலில் 1981ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர வைத்தியசாலைகளிலேயே இனங்காணப்பட்டது.

எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, இலங்கையில் எயிட்ஸ் தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்தார்.சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டங்கள் மற்றும் மக்களிடம் இருந்து கிடைக்கின்ற ஒத்துழைப்பு ஆகியன எயிட்ஸ் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளன என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.

அயல்நாடான இந்தியா எயிட்ஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கையில் அதனைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளமை இந்நாட்டு சுகாதாரத் துறையின் வெற்றியாக கருத முடியும் என்றும் பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க குறிப்பிட்டார்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons