flashvortex

Saturday, March 10, 2012

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார்

 100 வருடங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய போது மது போதையில் இருந்ததாக இதுவரை ஒரு போதும் கண்டறியப்படாத கடிதமொன்று கூறுகிறது.

அக்கப்பலின் கப்டன் எட்வார்ட் ஸ்மித் கப்பலிலிருந்த மதுச்சாலையில் மது அருந்தி விட்டு கப்பலை செலுத்தியதாக மேற்படி கப்பல் விபத்தில் உயிர் தப்பிய எமிலி நிச்சர்ட்ஸ் உரிமை கோரியுள்ளார்.

எட்வார்ட் ஸ்மித் (62 வயது) கப்பல் விபத்துக்கு சிறு மணித்தியாலங்களுக்கு முன்பு கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கான மாலை விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

டைட்டானிக் கப்பல் மூழ்கி இரு நாட்கள் கழித்து மீட்புக் கப்பலான ???? இருந்தவாறு தனது வீட்டினருக்கு எமிலி றிச்சர்ட்ஸ் எழுதிய கடிதத்திலேயே மேற்படி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கப்பல் விபத்தில் உயிரிழந்த 1522 பயணிகளில் எமிலி றிச்சர்ட்ஸ்ன் சகோதரரான ஜோர்ஸ் உள்ளடங்குகிறார்.

இந்நிலையில் எமிலி றிச்சர்ஸ் தனது மாமியாருக்கு எழுதிய மேற்படி கடிதத்தில் கப்டன் கப்பலைச் செலுத்தும் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு மதுச்சாலையில் மது அருந்தினார். இது கப்டனின் தவறாகும்.

நாம் தற்போது அறிந்ததன் பிரகாரம் எனது அப்பாவி சகோதரன் கடலில் மூழ்கியுள்ளான். இது போன்ற சம்பவத்தை இனிமேலும் நாம் ஒரு போதும் காண மாட்டோம் என நம்புகிறோம். நானும் அம்மாவும் பிள்ளைகளும் இறுதிப் படகில் இருந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

எமிலி றிச்சர்ட்ஸ் (24 வயது) அமெரிக்க ஒஹியோ மாநிலத்திற்கு சென்ற தனது கணவர் ஜேம்ஸுடனும் மகன்மாருடனும் இணைந்து கொள்ளவே டைட்டானிக் கப்பலில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்தக் கடிதமும் எமிலி றிச்சட்ஸால் அமெரிக்க நியூயோர் நகரை வந்தடைந்த பின் எழுதப்பட்ட கடிதமும் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளன. இக்கடிதங்கள் 20,000 ஸ்ரேலிங் பவுண் வரையான விலைக்கு விலைபோகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
___

சிரியாவில் சண்டை நிறுத்தத்துக்கு அன்னான் முயற்சி

ஐ.நா.மன்றத்தின் முன்னாள் தலைமைச் செயலரான கோஃபி அன்னான் அமைதியைக் கொண்டுவரும் முயற்சியாக சிரியாவில் சுற்றுப் பயணத்தை துவங்கியுள்ளார்.
ஐ.நா. மன்றம் அரபு லீக் என்று இரண்டு அமைப்புகளுக்குமான விசேட தூதுவராக அன்னான் சிரியா சென்றுள்ளார்.
உலகின் மோதல் பகுதி ஒன்றுக்கு அன்னான் செல்வது என்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல.
சிரியா சென்று இறங்கியவுடன் உடனடியாக அவர் அதிபர் பஷர் அல் அஸத்துடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றார்.
அரசு தரப்பும், கிளர்ச்சிப் படைகள் தரப்பும் முழுமையான மோதல் நிறுத்தத்தைக் கொண்டுவர வேண்டும், மனிதாபிமான உதவிப் பொருட்கள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும், அரசாங்கமும் எதிர்த்தரப்பும் அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் அன்னான் கோருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கோஃபி அன்னானுக்கும் நாட்டின் அதிபர் பஷர் அல் அஸத்துக்கும் இடையே ஆக்கப்பூர்வமான ஒரு சூழலில் சந்திப்பு இடம்பெற்றதாக சிரியாவின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சிரியாவில் வெளிநாடுகள் இராணுவ நடவடிக்கை எடுப்பது என்பதை தான் எதிர்ப்பதாக அன்னான் கூறியிருந்தது அந்நாட்டின் எதிர்க்கட்சிக் குழுக்களுக்கு ஆத்திரத்தைத் தந்திருந்தது.
அன்னானின் வருகையே வெளிநாட்டுத் தலையீட்டை தாமதப்படுத்துவதற்கான ஒரு உத்திதான் என்று எதிர்க்கட்சிக் குழுக்கள் விமர்சிக்கவும் செய்திருந்தன.

கத்தார் குரல்

இந்நிலையில், சிரியாவுக்குள் அரபு நாடுகள் மற்றும் பிற வெளிநாடுகள் அமைதிகாப்பு படையினரை அனுப்ப வேண்டும் என கத்தார் குரல்கொடுத்துள்ளது.
சிரியாவின் அஸத் அரசாங்கத்துக்கு எதிராக கத்தாரி பிரதமர் தொடர்ந்து அரபு லீக்கில் குரல்கொடுத்துவந்துள்ளார்.

சிரியாவில் தினந்தோறும் திட்டமிட்டு நடக்கின்ற படுகொலைகளை தடுத்து நிறுத்தவேண்டிய தார்மீக மற்றும் மனிதாபிமானக் கடமை சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.

ரஷ்யா நிலைப்பாடு

ஆனால் எகிப்தியத் தலைநகர் கெய்ரோவில் வைத்து அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து வருகின்ற ரஷ்ய வெளியுறவு அமைச்சரோ, வெளிநாடுகள் கண்மூடித்தனமாக சிரியா விவகாரத்தில் தலையிடக்கூடாது என்றும் அப்படியான தலையீடுகளை ரஷ்யா எதிர்க்கிறது என்றும் கூறியுள்ளார்.

கத்தாரும் ரஷ்யாவும் வெளியிட்டுள்ள ஒன்றுக்கொன்று முரணான அறிக்கைகள் சிரியா சென்றுள்ள சமாதானத் தூதுவர் கோஃபி அன்னான் மீது எந்த அளவுக்கு எதிரெதிரான அழுத்தங்கள் இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons