flashvortex

Wednesday, March 7, 2012

மேற்கிந்திய வீரர் கார் விபத்தில் பலி

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் ருனாகோமோர்டன் விபத்தில் பலியானார்.
இவர், நேற்று முன்தினம் உள்ளூர்ப் போட்டியில் பங்கேற்று விட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
runako_mortonமத்தியடி ரினிடாட்டில் உள்ள சொலமன் ஹோச்சே நெடுஞ்சாலையில் செல்லும் போது இவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே மோர்டன் மரணமடைந்தார்.
மோர்டன் 2002 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானதில் இருந்து இதுவரை 15 டெஸ்ட் , 56 ஒரு நாள் போட்டி, ஏழு ருவென்ரி 20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் இராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 
இவரது மரணத்துக்கு பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் கூறுகையில்; நாங்கள் உண்மையான ஒரு வீரரை இழந்து விட்டோம். மோர்டனின் ஆத்மா அமைதியாக உறங்கும். ஆனால் அவர் நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பார். மேலும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். 

இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் கெவின் பீற்றர்சன் கூறுகையில்; இன்று முழுவதும் மோர்டனின் குடும்பத்தினரின் நிலை குறித்து மட்டுமே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த அதிர்ச்சியை அவர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. மோர்டன் மிகச் சிறந்த கடுமையான போட்டியாளர் என்று தெரிவித்தார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் மட்டுமே மேற்குலகின் விருப்பம் எஜனீவாவில் இலங்கைத் தூதர் தமரா குணநாயகம் சீற்றம்

thamara_gunanayagamஇலங்கையில்"ஆட்சி மாற்றம்' மட்டுமே மேற்குலகின் விருப்பமாக  உள்ளது என்று இலங்கையின் தூதுவரும் ஐ.நா.வுக்கான ஜெனீவாவிலுள்ள நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான தமரா குணநாயகம் கடுமையாகச் சாடியுள்ளார். "அவர்களின் உண்மையான நோக்கம் ஆட்சி மாற்றமே. ஜெனீவாவிலுள்ள தூதுவர்கள் பலர் இலங்கையில் தாங்கள் இதனையே வென்றெடுக்க விரும்புவதாக எனக்குக் கூறிக்கொண்டிருக்கின்றனர்.  ஆதலால் இந்த விடயத்தை நாங்கள் மிகத் தீவிரமான விடயமாக எடுத்துக்கொள்கிறோம். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக "பாதுகாப்பதற்கான பொறுப்பு' அல்லது கீ2க என்ற கோட்பாட்டை அமுல்படுத்த  அமெரிக்கா நாடியிருந்தது. நாடுகள் மீது இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்த இந்தக் கோட்பாட்டை அமுல்படுத்த அமெரிக்கா நாடுகிறது. அந்த நாடுகளில் அரசாங்கத்தால் தனது சொந்த மக்களைப் பாதுகாக்க முடியாது' என்பதே அமெரிக்காவின் கருத்தாக இருந்து வருகிறது என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் தமரா குணநாயகம் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையைத் "தோல்வி கண்டநாடு' என்று பிரிட்டிஷ் வெளிவிவகார இணை அமைச்சர் ஜெரமி பிரௌவுனி முன்வைத்த வாதத்திற்கு பதிலளித்த தமரா குணநாயகம்,"பயங்கரவாத நாடுகள்'," போக்கிரி நாடுகள்' போன்ற கருத்தைக் கொண்டதே"தோல்வி கண்ட நாடு' என்பதாகும். இறைமையுள்ள நாடுகளின் உள்  விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு நியாயப்படுத்த இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேவ தூதரைப் போன்ற தார்மீக உணர்வைக் கொண்டிருப்பவரைப் போன்ற தோற்றப்பாட்டுடன் இந்தக் கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  பிரிட்டிஷ் வெளிவிவகார இணை  அமைச்சர் ஜெரமி பிரௌனி இலங்கையை "தோல்வி கண்ட நாடு' எனக் குறிப்பிட்டிருப்பது நேரடியான குறிப்பாகும்.

அதேசமயம் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் (நவநீதம்பிள்ளை) தீங்கு விளையாத தன்மையைக் கொண்ட வார்த்தையைப் பிரயோகிக்கிறார். ஆனால், இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாளும் பகுதியில் அந்த அபாயகரமான கருத்தீட்டுடன் இணைந்ததாக பேச்சினிடையே வற்புறுத்தல் கொடுக்கிறார். தனது பிரஜைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கைக்கு இயலாமல் அல்லது விருப்பமில்லாமல் உள்ளது என்ற கருத்தை அவர் பரிந்துரைக்கிறார். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான தகைமையற்றவையாக இலங்கையின் நிறுவனங்கள் இருக்கின்றது என்றும் ஐ.நா. நிறுவனங்களுடன் நடவடிக்கைகளில் ஈடுபட இலங்கை மறுக்கின்றது என்ற கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார் என்றும் தமரா குணநாயகம் சாடியுள்ளார்.

ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் தாம் மேற்கொண்ட தலையீடுகளை நியாயப்படுத்தவே இந்த மாதிரியான வாதங்களை மேற்குலகு முன்வைத்திருக்கிறது என்றும் தமரா குறிப்பிட்டுள்ளார்.

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டது அரிசியின் வரியும் அதிகரிக்கப் போகிறது



potatoesஉருளைக்கிழங்கிற்கான வரியை அரசு பத்து ரூபாவால்  அதிகரித்துள்ளது. இந்த வரி அதிகரிப்புக்கு அமைய  இதுவரை  இறக்குமதி செய்யப்படும்   உருளைக்   கிழங்கிற்கு இருந்த  20 ரூபா வரியை அரசு மார்ச் முதலாம் திகதி முதல் 30 ரூபாவாக அதிகரித்துள்ளது.


மஹிந்த சிந்தனைக்கு  அமைய உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும்  நோக்கிலேயே  உருளைக்கிழங்கிற்கான  இறக்குமதி வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கடந்த  வருடம்  உருளைகிழங்கிற்கான  இறக்குமதி வரி பத்து ரூபாவிலிருந்து  20 ரூபாவாக  அதிகரிக்கப்பட்ட நிலையில்  தற்போது 20 ரூபாவிலிருந்து  இறக்குமதி வரி 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இதேநேரம் அரிசிக்கான  இறக்குமதி வரியையும் அதிகரிப்பது  தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர்  யாப்பா தெரிவித்துள்ளார்.

உள்ளூர் விவசாயிகளின்  உற்பத்திக்கு மதிப்பளித்து அவர்களை ஊக்குவிக்கும்  வகையிலேயே  அரிசிக்கான   இறக்குமதி  வரியும்  அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை பிரமுகர்கள் அனுமதி இன்றி தமிழகம் வரக்கூடாது- ஜெயலலிதா

தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமல் இலங்கைப் பிரமுகர்களை தமிழகத்திற்குள் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மேலும் இலங்கைப் பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவதையும் மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம்: 

இலங்கைத் தமிழர்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசு நடந்து கொண்டு வரும் விதம் குறித்து தமிழக மக்கள் முழுமையாக அறிந்துள்ளனர்.

ஈழத் தமிழர்கள் கெளரவமாகவும், கண்ணியத்துடனும் வாழ இலங்கை அரசு வழி செய்யவில்லை என்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தாகும். மேலும் சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்தை இலங்கை அரசு தமிழர்களுக்கு வழங்கவில்லை என்பதும் தமிழகத்தின் கருத்தாகும். 
இந்தப் பின்னணியில் இலங்கையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் தனிப்பட்ட பயணமாக, மாநில அரசுக்கு எந்தவிதத் தகவலையும் கூட தராமல் அடிக்கடி வந்து செல்ல ஆரம்பித்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு வருகையின்போது இலங்கை ஜனாதிபதியின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் என்பவர், 9.1.2012 மற்றும் 10.1.2012 ஆகிய நாட்களில் இராமேஸ்வரம் வந்துள்ளார். அப்போது அவர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார். 

அவரது வருகை குறித்து இந்திய அரசிடமிருந்தோ, இலங்கை அரசிடமிருந்தோ எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியவில்லை. 
இந்த சம்பவம் தொடர்பாக தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளரும் எழுதியுள்ள கடிதம் எனது பார்வைக்கு வந்தது. அந்த கடிதத்தின் தொணி, அதில் பிரயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகள், தேவையில்லாதது, நியாயமற்றது, ஏற்றுக் கொள்ள முடியாதது. 

இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், விஐபிக்கள் மாநில அரசுக்குத் தகவல் கொடுக்காமல் வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் கடந்த 16.9.2011, 24.2.2012 ஆகிய நாட்களில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

எனவே, தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, இலங்கையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை மத்திய அரசு ஊக்கம் தரக் கூடாது, ஊக்குவிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 

பில்லேடன் உடல் கடலில் அல்ல- அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது- விக்கிலீக்ஸ்!

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக அமெரிக்க அரசுக்காகவும் ராணுவத்துக்காகவும் உளவுப் பிரிவுக்காகவும் அமெரிக்க நிறுவனங்களுக்காகவும் பல்வேறு நாடுகளில் உளவு பார்த்து வரும் தனியார் நிறுவனத்தின் ரகசிய இமெயில் பரிமாற்றங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் உளவு நிறுவனத்தின் துணைத் தலைவர் பர்ட்டன் தனது அதிகாரிக்கு எழுதியுள்ள இமெயிலை விக்கிலீக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது

பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்க அரசு கூறியபடி கடலில் புதைக்கப்படவில்லை.
மாறாக அந்த உடல் சிஐஏவின் விமானத்தில் அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த உடலை பரிசோதனை செய்ய சிஐஏ முடிவு செய்தது. மேரிலாண்டின் பெதெஸ்டா பகுதியில் உள்ள ராணுவத்தின் நோய் தடுப்பியல் ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உடல் இப்போதாவது புதைக்கப்பட்டுவிட்டதா அல்லது இன்னும் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஒசாமாவின் உடலை இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து அரபிக் கடலில் புதைத்தாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். ஆனால், அது பொய் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

பில்லேடன் உடல் கடலில் அல்ல- அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது- விக்கிலீக்ஸ்!

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக அமெரிக்க அரசுக்காகவும் ராணுவத்துக்காகவும் உளவுப் பிரிவுக்காகவும் அமெரிக்க நிறுவனங்களுக்காகவும் பல்வேறு நாடுகளில் உளவு பார்த்து வரும் தனியார் நிறுவனத்தின் ரகசிய இமெயில் பரிமாற்றங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் உளவு நிறுவனத்தின் துணைத் தலைவர் பர்ட்டன் தனது அதிகாரிக்கு எழுதியுள்ள இமெயிலை விக்கிலீக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது

பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்க அரசு கூறியபடி கடலில் புதைக்கப்படவில்லை.
மாறாக அந்த உடல் சிஐஏவின் விமானத்தில் அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த உடலை பரிசோதனை செய்ய சிஐஏ முடிவு செய்தது. மேரிலாண்டின் பெதெஸ்டா பகுதியில் உள்ள ராணுவத்தின் நோய் தடுப்பியல் ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உடல் இப்போதாவது புதைக்கப்பட்டுவிட்டதா அல்லது இன்னும் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஒசாமாவின் உடலை இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து அரபிக் கடலில் புதைத்தாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். ஆனால், அது பொய் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons