தமிழ் படும்பாடு!!!!!!!!!!!
ஆங்கிலவழிக் கல்வியே இன்று பிரதானமாக இருக்கிறது. தாய் மொழியை இரண்டாம் மொழிஇ மூன்றாம் மொழிப் பாடமாகக்கூட பயில்வதற்கு தயங்குகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு வேற்று மொழிக் கலப்பின்றி தமிழ் மொழியில் கல்வியை பயிற்றுவிக்க வேண்டும். இன்று தமிழர்கள் பிறமொழிக் கலப்பில்லாமல் பேசமுடிவதில்லை. அந்த அளவிற்கு நம்மிடம் சொற்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. ஒரு மொழியை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே அதில் புதிய சொற்களை பயன்படுத்தமுடியும். நாம் பேசும் போது ஆங்கிலச்சொற்களை அதிகம் பயன்படுத்தினால் மேலானவர்கள் என்ற எண்ணம் இருப்பதாக பலர் நினைக்கிறார்கள்.
ஆங்கிலேயர்கள் சந்திக்கும் பொழுது தம் மொழியிலேயே உரையாடுகின்றார்கள். அதே போல இந்தியாவில் உள்ள இன மக்கள் தமது மொழியிலேயே உரையாடுகின்றனர் ஆனால் தமிழன் மட்டும் ஏன் தமிழில் உரையாடாமல் ஆங்கிலத்தில் உரையாடகின்றான்?. தமிழனே தமிழை இழிவு படுத்துகின்றான்.
இன்று மொழிதான் இனம் என்பதை அங்கீகரிக்கிறது. நாம் தாய் மொழியை புறக்கணிக்கும்போது இனத்திலிருந்தே வெளியே சென்றுவிடுகிறோம் என்பது மட்டுமல்ல நாம் அடையாளமற்று போய்விடுகிறோம். என்று யாருமே நினைப்பதில்லை.
அவரவர் மொழியில் முதலில் புலமை பெறவேண்டும். ஆங்கிலத்தில் தான் நாம் மருத்துவம் தொழில்நுட்பம் கணனி போன்றவற்றை கற்கிறோம். இப்பாடங்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலே கற்க வேண்டிய ஒரு நிர்ப்பந்த்த்துக்கு மனிதன் ஆட்படுகின்றான். இதனால் விரும்பியோ விரும்பாமலோ மனிதன் ஆங்கிலத்தில் தன்னை உட்படுத்திக் கொள்கின்றான். இதனாலேயே மக்கள் மத்தியில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் அதிகமாகின்றது என்பதும் ஒரு காரணம்.
நாகரீக வளர்ச்சியின் ஆரம்பமே தமிழ் மொழியின் அழிவு......... நாகரீகம் வளர வளர தமிழ் மொழியில் ஆங்கில மொழியின் கலப்பு அதிகமாகிக் கொண்டே இருந்த்து. உதாரணமாக.............ஆரம்ப காலத்தில் பிறந்த குழந்தைகள் அம்மா என்றே தாயை அழைக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெற்றோரே அதனை விரும்புவதில்லை. அவர்கள் தமது குழந்தைகள் ம்ம்மி என்று அழைப்பதனையே விரும்புகின்றனர். இதனாலும் தமிழை வளர்க்க வேண்டிய இளம் சமுதாயம் ஆங்கில மொழியை வளர்க்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.
செய்திகளை பிறமொழி வழியே அறிந்து கொண்டு தமிழராக தன்மொழி வழியே சிந்திப்பதை மறுத்து ஆங்கிலத்தில் படித்து அதிலேயே சிந்தித்து மேலை நாட்டுக்காரர்களாகவே தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.
மக்களிடையே ஆங்கில மொழி வளர்வதற்கு சினிமாவும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் சினிமாவில் தமிழ் மொழியை விட ஆங்கில மொழியின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளது. ஆரம்ப காலங்களில் வந்த சினிமா படங்களில் தமிழ்மொழிதான் பேசப்பட்டது. அதனால் தான் இன்று வரை அவை காவியமாக நிலைத்து நிற்கின்றது. ஆனால் இப்பொழுது வெளிவரும் படங்களில் தமிழ் அதிகமாக பேசப்படுகின்றதோ இல்லையோ? ஆங்கிலம் அதிகமாக பயன்பட்டு வருகின்றது. 2011ல் வெளிவந்த why this kolaiveri பாடலே சிறந்த உதாரணம். இப் பாடலில் தமிழ் மொழியை விட ஆங்கில மொழியின் வரிகளே அதிகமாக உள்ளது. இதனாலேயே மக்கள் மத்தியில் இப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எத்தனையோ தமிழ் சொற்களை மனிதன் மறந்துவிட்டான்.......... எத்தனை பேருக்கு தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் தெரிந்துள்ளது என்று பார்த்தலே தமிழ் மொழி எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது என்று தெரியும். ஆங்கிலமொழி ஒவ்வொரு மனிதனுக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதான் அதற்காக எமது தாய்மொழியை தாழ்த்தி ஆங்கிலமொழியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மனிதன் முற்றாக அழிக்க வேண்டும்.
யாழ் கோட்டை
யாழ்ப்பாண வரலாற்றின் சின்னமாக விளங்குகிறது யாழ் கோட்டை. யாழ் கடல் நீரேரியின் கரையில் இது அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட நீள் வரலாறு இதில் அடங்குகிறது. ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கோட்டை பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் மிகவும் பலமானதாகவும். அற்புதமானதாகவும் 1625ம் ஆண்டு போத்துக்கேயரால் கட்டப்பட்டது. 1680ல் ஒல்லாந்தரால் ஐங்கோண புதுவடிவில் கட்டப்பட்டது.
5 கொத்தளங்களைக் கொண்டதாக இருந்தது. கடல்நீர் ஏரியை அண்டி இரு கொத்தளங்களும், நிலத்தை அண்டி 2 கொத்தளங்களும் அமைந்திருந்தன. இந்தக் கொத்தளங்கள் உயர்ந்த மதில்களால் இணைக்கப்பட்டிருந்தன.கோட்டை மதில் அடிப் பகுதியில் 40அடி அகலமானதாகவும், உச்சியில் 20 அடி அகலமாகவும் அமைக்கப்பட்டிருந்தது. மதிலின் வெளிப்பக்கமாக முருங்கைக் கற்களால் அமைக்கப்ட்ட 4 அடிக் கட்டமைப்பு இருந்தது. உட்கோட்டையைச் சுற்றி நீராழி ஓடிக்கொண்டிருக்கும். கோட்டையைச் சுற்றியிருக்கும் 132 அடி அகலமான அகழி உள்ளது.
எதிர்கால தலைமுறைக்காக வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்க நிறுவனங்களால் கோட்டையை பாதுகாக்கும் நோக்கில் வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது.
இப் பெரு முயற்சின் ஓர் அங்கமாக, தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படும் யாழ் கோட்டையை சுற்றியுள்ள அகழி மற்றும் வெளிப்புற பாதுகாப்பு அரண் ஆகியவற்றை சுத்தம் செய்யும் வேலையில் படையினரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவ் வேலைத்திட்டமானது, நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

யாழ் கோட்டையின் வாயில்
சுற்று மதில்
கோட்டையை சுற்றியுள்ளஅகழி
ஆரம்ப காலத்தில் தூக்குமேடை என்று
அழைக்கப்பட்ட மணிக்கூண்டு கோபுரம்
மகாராணி தங்கியிருந்த அந்தப்புரம்
மன்னர் காலத்தில் இருந்த சுரங்கப்பாதை
கோட்டையில் உள்ள 7கிணறுகளில் ஒன்று
இடிவடைந்தநிலையில் உள்ள தேவாலயம்
இடிவடைந்தநிலையில் உள்ள இந்து கோயில்![]()
காவலாளிகள் காவல்காக்கும்இடம்
கோட்டையை புனரமைக்கும் வேலையாட்கள்
கோட்டையை புனரமைக்கும் வேலையாட்கள்
இன்றைய உலகின் தலை சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவர்,இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றின் தலை சிறந்த டெஸ்ட்வீரர்,ஐசிசி தர வரிசையில் முதல்தடவையாக முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகிலேயே அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்ற வீரர் இவர்தான் என்ற போதும் தரப்படுத்தலின் ஏனைய காரணிகளால் மூன்றாம் நான்காம் இடங்களில் இருந்து வந்த மஹேல,முதல் முறையாக முதல் இடத்தினைப் பிடித்துள்ளார்.

கடந்த இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஒன்பதாயிரம் ஓட்டங்களை கடந்து பல சாதனைகளையும் மைல்கற்களையும் கண்ட மகேலவுக்கு சாதனைகள் ஒன்றும் புதிதல்ல.ஏனெனில் இவரது அறிமுகப்போட்டியே ஒரு உலக சாதனைப்போட்டி.டெஸ்ட் வரலாற்றின் ஒரு இன்னிங்க்சில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணியாக இலங்கை தன்னைப் பதிவுசெய்த போட்டிதான் மகேலவின் அறிமுக போட்டி,ராமர்பாலம் கட்ட அணில் உதவியது போல 952 ஓட்டங்களில் மகேலவும் தனதுபங்காக 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.இவர் ஆடு களத்தில் முதல்முறை ஆடவந்த போது மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்தவர் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் அரவிந்த.இப்படித் தான் ஆரம்பமானது இவரின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு .

மஹேல தனது முதல் சதத்தினை நான்காவது போட்டியிலேயே பதிவு செய்தார்.காலி மைதானத்தில் பெரிதாக ஓட்டங்களை குவிக்க முடியாத ஆடுகளத்தில்,நியுசிலந்துடன் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்து அழுத்தங்களுடன்(under pressure) ஆடிய இலங்கை அணியில் சனத்,அரவிந்த,ரணதுங்க போன்றோர் தடுமாறி வரிசையாக ஆட்டமிழக்க "இளங் கன்று பயமறியாது "என்பது போல அனாயசமாக ஆடி 167 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி வெற்றிக்கு பாலம் அமைத்தார்.தனது ஏழாவது போட்டியிலேயே இந்தியாவுடன் இரட்டை சதமடித்து உலகினை தன்பக்கம் திரும்ப வைத்தார்,இது தான் மஹேல எஸ்.எஸ்.சி யில் பெற்ற முதல்சதம். கும்ப்ளேயும்,ஹர்பஜனும் விக்கட்டுகளை மறுகரையால் சரிக்க,ஒருபுறம் மகேலவோ நிதானமும் அதிரடியும் கலந்து Bating விருந்து அளித்து கொண்டிருந்தார்.


இங்கு நான் கண்டிப்பாக எஸ்.எஸ்.சி க்கும் மகேலவுக்குமான ராசி பற்றி சொல்லியே ஆக வேண்டும்.எஸ்.எஸ்.சி தான் மஹேலவின் சொந்த மைதானம்.இவர் சிறு வயதிலிருந்து இந்தக்கழகத்திற்கே ஆடி வருவதால் இவருக்கு இந்த மைதானம் அத்துப்படி.என்னதான் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கோ,சுழலுக்கோ சாதகமாய் இருந்தாலும் இங்கே பந்து மஹேல சொல்தான் கேட்கும்.எந்த புல்லில் பட்டால் பந்து எந்தவேகத்தில் செல்லும் என்றுகூட மகேலவுக்கு தெரியும் என இலங்கை வர்ணனையாளர் ஒருவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.இதற்கு இவர் இந்தமைதானத்தில் பெற்றிருக்கும் பெறுபேறுகள் சான்று.22 போட்டிகளில் 2467 ஓட்டங்கள்,அதில் ஒன்பது சதங்கள்.ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்கள் எனும் சாதனைக்கு மஹேல சொந்தக்காரர்.டான் பிரட்மன் எம்.சி.ஜி யில் பெற்ற ஒன்பது சதங்களுக்கான சாதனையை மஹேல எஸ்.எஸ்.சி யில் பெற்றிருக்கும் ஒன்பது சதங்கள் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.இச்சாதனையினை முறியடிக்க வந்த வாய்ப்புகளை நியுசிலந்துடன் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் தொன்னூறுகளில் ஆட்டமிழந்த்ததால் தவறவிட்ட மகேலவுக்கு இந்த சாதனையினை முறியடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.இப்படியே இது தொடர்ந்தால்,மஹேல ஆடும்வரை எஸ்.எஸ்.சி யில் போட்டிகள் வேண்டாம் என்று உலகநாடுகள் அனைத்தும் ஐ.சி.சி க்கு மனு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


உயர்வேகத்தில் மேலேசென்று கொண்டிருந்த மகேலவின் கிரிக்கெட் வாழ்க்கையில் தடைக் கல் போலத்தான் அமைந்தது அந்த 2003 உலக கிண்ணம்.ஒன்பது போட்டிகளில் வெறும் 21 ஓட்டங்களையே பெற்றார் மஹேல.இன்னமும் சிலர் இதனையே கூறி மகெலவை விமர்சனம் செய்து அற்பசந்தோசம் கண்டு கொள்கிறார்கள்.ஆனால் அதே உலககிண்ணத்தில் பாகிஸ்தான் வரலாற்றின் தலைசிறந்த வீரர் இன்சமாம் மகேலவை விட குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்தார்.அதற்காக இன்சமாமும் பல விமர்சனங்களுக்கு ஆளானார்.அதிர்ஷ்டம் திறமயைத் தீண்டலாம்,ஆனால் திருடிவிடமுடியாது.அணியில் இருந்தே விலக்கப்பட்ட மஹேல இரண்டு வருடங்களின் பின் அணித்தலைவராய் பொறுப்பேற்று அணியை 2007 உலக கோப்பை இறுதியாட்டம் வரை கொண்டு சென்றது மட்டுமல்லாமல் எப்படி 2003 உலககோப்பையில் இரண்டாவது குறைந்த ஓட்டங்கள் பெற்றவர் பட்டியலில் இருந்தாரோ அதேபோல் இம்முறை அதிகஓட்டங்கள் பெற்றவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார். இது அவரது திறமைக்கு ஒருசான்று.


cover drive,on drive.leg glance,pullshot,hookshot,squarecut,improviseshot களான latecut,paddlesweep,inside out என அனைத்து shot களையும் துல்லியமாக ஆட கூடிய ஒரு சில வீரர்களில் மகேலவும் ஒருவர்.ஒரு முழுமையான இன்னிங்க்ஸ் மகேல ஆடினால் அதனை ஒரு பாடமாக சொல்லகூடியது போல் இருக்கும்.டெஸ்ட் போட்டிகளில் அந்தந்த பந்துகளுக்கு ஏற்றாட்போல ஆடும் மகேல ஒருநாள் போட்டிகளில் அதனை சரியாக கையாளாதது அவரின் திறமைக்கு குறைவான ஒருநாள் பெறு பேற்றுக்கு காரணம் என்பது மறுப்பதற்கில்லை.இன்னிங்க்ஸ் ஆரம்பத்திலேயே cover drive போன்ற shots தேர்வு செய்வது பல சமயம் இவரின் விக்கடை பறிகொடுக்க காரணமாக இருந்துள்ளது,மற்றும் 40 ஓவர்கள் வந்து விட்டால் ஒவ்வொரு பந்தும் அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் ஆடுவதால் தனது விக்கட்டை தானே பல தடவை எதிரணியினருக்கு கொடுத்துள்ளார்( he throw his wicket).

சில சுயநல ஆட்டம் ஆடும் வீரர்கள்போல் 48,49 ovar வரை நிதானமாக ஆடியிருந்தால் இன்னும் சிறப்பான பெறுபேறுகள் கிடைத்திருக்கும்,ஆனால் தனது சுபாவத்தை மாற்றமுடியாதுள்ளதாக மஹேல பலதடவை தானே குறிப்பிட்டுள்ளார். மகேல தன் திறமையினை விட குறைந்த ஓட்டங்களையே ஒருநாள் போட்டிகளில் பெற்றிருக்கும் போதும் அவர் சதம் அடித்த (11 தடவையும் ) அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெற்றிக்கனியை சுவைத்துள்ளது என்பதிலிருந்து அவர் சுயநல ஆட்டம் ஆடுவதில்லை என்பது கண்கூடு.

இவரின் திறமைகள் உச்சத்தைதொட்ட காலம் இவர் அணித்தலைவராய் பொறுப்பேற்ற பின்னர்தான்.இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் தோல்வியின் விளிம்பிலிருந்த இலங்கையினை மீட்டெடுத்து சமநிலைப்படுத்த தோள்கொடுத்தார்,பின்னர் ஒரு நாள் தொடரினை 5-௦0 என இலங்கை வென்ற போது மஹேல தொடர்ச்சியாக இரண்டு சதமடித்தார்.இவரது தலைமையின் கீழ் இலங்கை ஒருநாள் போட்டியிலும் (443),T௦/20௦ போட்டியிலும்(260) அதி கூடிய ஓட்டங்களை பெற்ற உலக சாதனையினை பதிவு செய்தது.இவரது தலைமையிலான இலங்கையணி மேற்கிந்தியதீவுகளில் வைத்து முதல் டெஸ்ட் வெற்றியை இலங்கைக்கு பெற்று தந்தது ,ஆசியகொப்பையை மீண்டும் தக்கவைத்துக்கொண்ட மகேல இங்கிலாந்து , நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் என்பவற்றில் நடந்த தொடர்களில் டெஸ்ட் தொடர்களை சமன் செய்திருந்தார்.மற்றும் ஆசிய அணிக்கு தலைமை தாங்கி ஆபிரிக்க அணிக்கு எதிராக 3போட்டிகளிலும் வெற்றி பெற்று கொடுத்ததொடல்லாமல் அந்த தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவாகியது மகேலாவின் தலைமைத்துவத்தின் சிறப்பான தகமைக்கு இன்னுமொரு எடுத்துகாட்டு.

சொந்த மண்ணில் தென்ஆபிரிக்காவுடனான டெஸ்ட் தொடர் சாதனைகளுக்கான தொடராக மாறியது.தான்விளையாடிய முதல் போட்டியில் இலங்கை வீரர்ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக சனத் ஏற்படுத்திய சாதனையை முறியடித்து வலதுகை துடுப்பாட்டவீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களுக்கான(374) உலக சாதனையை நிலைநாட்டினார்.தனது நெருங்கிய நண்பரான சங்காவுடன் பெற்ற இணைப்பாட்டம் கிரிக்கெட் வரலாற்றின் எந்த ஒரு விக்கட்டுகுமான சாதனை இணைப்பாட்டம்.ஆனால் எனக்கு என்னமோ அந்த 374ஐ விட இரண்டாவது போட்டியில் மஹேல பெற்ற 123 ஓட்டங்கள் தான் அவரது தலைமை பொறுப்பின் இயல்பை காட்டியது.அந்த போட்டியில் 352 என்ற இலக்கை அடைந்தது இலங்கை அணியின் வெற்றிகரமான நான்காம் இன்னிங்சுக்கான சாதனை.(successfull runchase in the 4th innings)


யார் கண் பட்டதோ அதன் பின் ஒரு நாள் போட்டிகளில் மஹேல சோபிக்கவில்லை,2007 உலக கிண்ணத்தின் முன் வல்லுனர்கள் கணிப்புபடி மகேலவின் போம் இலங்கைக்கு பின்னடைவு என்று எதிர்வுகூறப்பட்டது.ஏனெனில் அதற்கு முன் மஹேல பதினேழு போட்டிகளாக அரை சதம் ஒன்றை கூட பெறவில்லை.ஆனால் எந்த மகேலவின் போர்ம்(out of form)இலங்கைக்கு பின்னடைவாக கூறப் பட்டதோ அதுவே இலங்கையினை இறுதிப் போட்டிவரை கூட்டி சென்றது என்றால் அது மிகை அல்ல.அதுவும் அந்த அரைஇறுதி போட்டி,அந்த இன்னிங்க்ஸ் ஒருபாடம்,பொறுமை,நிதானம்,வேகம் அனைத்தும் கலந்துகட்டி அடித்த ஒருவிருந்து.சபீனாபார்க் மைதானம் இனி அப்படி ஒரு இன்னிங்க்ஸ் காணுமா என்பது சந்தேகமே.


நான் ரணதுங்க தலைமை வகித்த போட்டிகள் அவளவாக பார்த்ததில்லை,பார்த்தாலும் அதை பகுத்தறியும் வயதுமில்லை.ஆனால் அர்ஜுனவின் பின்,அர்ஜுனவை விட ஆளுமை மிகுந்த தலைவராக மகேல விளங்கினார் என்று பலர் கூற கேட்டிருக்கிறேன்.தலைமையை கூட ரசிக்க வைத்த ஒரு தலைவராக மகேல விளங்கினார்.தலைமை மூலம் போட்டிகளை மாற்ற முடியும் என்று விளங்க வைத்தவர்.களத்தடுப்பு பிரயோகங்கள் வீரர்களுக்கு ஏற்றது போல அமைத்து பல யுக்திகளை கையாண்டார்.ஒரு தலைவராக மகேல அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார். இவரது திறமைக்கு இரண்டு ஆண்டுகள் தலைமை போதாதுதான்.ஆனால் அவர் எடுத்த சொந்தமுடிவு என்பதால் அது சரியாகவே இருக்கும்.

சாதனைகள் பலவில் மகேல இடம்பெற்றாலும் மகேல உலகளவில் பெரிதளவில் அவதானிக்க படவில்லை.அதற்கு கரணம் மகேல அறிமுகமான போது ஜாம்பவான்களான அர்ஜுன ,அரவிந்த ,சனத் போன்றோர் இருந்தனர்.அவர்கள் ஓய்வு பெற்ற போது மகேல வீழ்ச்சி (உலக கிண்ணம் 2003 ) கண்டிருந்தார் .எனவே அந்தவேளை பிரகாசிக்க ஆரம்பித்த சங்கா அவதானிக்கப்பட்டு பின்னர் ஆங்கில வர்ணனையாளர்கள் மூலம் சங்கா விளம்பர படுத்தப்பட்டார்.இதனாலோ என்னமோ மஹேல இதுவரை பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.


வெளிநாட்டு மைதானங்களில் மகேல சோபிப்பதில்லை என்று ஒரு கருத்து உள்ளது இது முற்றிலும் தவறானது.உள்நாட்டில் சோபிக்கும் அளவு வெளிநாடுகளில் சோபிப்பதில்லை என்று கூறுதல் சரியாக இருக்கும், இதற்கு வெளிநாடுகளில் இலங்கை அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததும்,இளம் வயதில் வழங்கப்பட்ட உபதலைவர் பொறுப்பும்,சில வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது மகேல சிறந்த போமில் இல்லாததுமே காரணங்மாகும்.ஆனால் தற்போது கடைசியாக பெற்ற 14 சத்தங்களில் 7 சத்தங்கள் வெளிநாடுகளில் பெறப்பட்டதாகும்,மகேல டெஸ்ட் சதத்தை பெறாத ஒரேநாடு தென்னாபிரிக்கா.அங்கும் 98 ஓட்டங்களில் துரதிர்ஷ்டதால் சதத்தை தவற விட்டிருந்தார்.மற்றும் மகேலவின் 11ஒருநாள் சதங்களில் 8 வெளிநாடுகளில் பெறப் பட்டவை.அனைத்து நாடுகளுடனும் சதமடித்துள்ள மகேலாவிற்கு அனைத்து நாடுகளிலும் சதமடிக்க தென்னாபிரிக்காவில் ஒருசதம் மட்டுமே தேவையாக உள்ளது,அடுத்த தென்னாபிரிக்க தொடதுக்காக காத்திருப்போம்.இனிவரும் வெளிநாட்டுதொடர்களில் சாதிக்கபோகும் மகேலாவை நீங்கள் காணலாம்.

மகேலாவின் சாதனைகள்
1.வலது கை துடுப்பாட்டவீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டம் ,374 ஓட்டம்
2.ஒரு மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டம், 2467 ஓட்டங்கள்,22 போட்டிகளில் s.s.c மைதானம்
3.ஒரு நாள் போட்டிகளில் அதிகமான பிடிகள்,165 பிடிகள்
4.ஒரு பந்து வீச்சாளருக்கு அதிகமான பிடிகள், டெஸ்ட் போட்டிகளில் , முரளியின் பந்துவீச்சுக்கு 75 பிடிகள்
5.டெஸ்ட் போட்டிகளில் எந்தவொரு விக்கட்டுக்குமான இணைப்பாட்டசாதனை 626 ஓட்டங்கள்,குமார் சங்ககாராவுடன் இணைந்து ssc மைதானத்தில் தென்னாபிரிக்காவுடன்
6.டெஸ்ட் போட்டிகளில் மூன்றாம் விக்கட்டுக்கான இணைப்பாட்டசாதனை 626 ஓட்டங்கள்,குமார் சங்ககாராவுடன் இணைந்து ssc மைதானத்தில் தென்னாபிரிக்காவுடன்
7.டெஸ்ட் போட்டிகளில் நான்காம் விக்காட்டுக்கான இணைப்பாட்டசாதனை 437 ஓட்டங்கள்,திலான் சமரவீராவுடன் இணைந்து கராச்சி மைதானத்தில் பாகிஸ்தானுடன்
8.டெஸ்ட் போட்டிகளில் ஆறாம் விக்காட்டுக்கான இணைப்பாட்டசாதனை 351 ஓட்டங்கள் , பிரசன்ன ஜெயவர்த்தனவுடன் இணைந்து அகமதாபாத் மைதானத்தில் இந்தியாவுடன்
9.ஒருநாள் போட்டிகளில் ஆறாம் விக்கட்டுக்கான இணைப்பாட்டசாதனை 218 ஓட்டங்கள், மகேந்திரசிங் டோனியுடன் இணைந்து சேப்பாக்கம் மைதானத்தில் ஆபிரிக்கஅணியுடன்
10. ஆசிய நாடுகள் நான்கிலும்(இலங்கை, இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ்) 150+ ஓட்டங்களை பெற்ற முதல் மற்றும் ஒரேவீரர்.

இங்கிலாந்தில் வழங்கப்படும் விளையாட்டுக்கான அதி உயர் விருதான் விஸ்டன் விருது , மற்றும் I.C.C வழங்கிய சிறந்த அணித்தலைவருக்கான விருதும் மகேலாவின் திறமைக்கு ஏனைய சான்றுகள்.


தொடர்ந்து இதேமாதிரி தொடர்ச்சியாக ஓட்டங்களை குவிக்கும் பட்சத்தில் 32 வயது மட்டுமேயான மகேலவால் டெஸ்ட் போட்டிகளின் மொத்த ஓட்டங்கள்,சதங்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டையுமே முறியடிக்கும் வாய்ப்புள்ளது. இலங்கை வருடத்திற்கு 10 டெஸ்ட் போட்டிகள் விளையாடினால் இது சாத்தியமே. மகேல தொடர்ந்தும் மின்னுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
போதி தருமன்
போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.[தொகு] குங்ஃபூவும் போதி தருமனும்
போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.
2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).
4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.
5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.
6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué
யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)
7. 28 குருமார் வரிசை
Śākyamuni Buddha
1.Mahākāśyapa Móhējiāyè 摩訶迦葉
2.Ānanda Ānántuó 阿難陀
3.Śāṇavāsa Shāngnàhéxiū 商那和修
4.Upagupta Yōupójúduō 優婆掬多
5.Dhṛṭaka Dīduōjiā 提多迦
6.Miccaka Mízhējiā 彌遮迦
7.Vasumitra Póxūmì 婆須密
8.Buddhānandi Fútuónándī 浮陀難提
9.Buddhamitra Fútuómìduō 浮陀密多
10.Pārśva Pólìshīpó 婆栗濕婆
11.Puṇyayaśas Fùnàyèshē 富那夜奢
12.Ānabodhi / Aśvaghoṣa Ānàpútí 阿那菩提
13.Kapimala Jiāpímóluó 迦毘摩羅
14.Nāgārjuna Lóngshù 龍樹
15.Kāṇadeva Jiānàtípó 迦那提婆
16.Rāhulata Luóhóuluóduō 羅睺羅多
17.Saṅghānandi Sēngqiénántí 僧伽難提
18.Saṅghayaśas Sēngqiéshèduō 僧伽舍多
19.Kumārata Jiūmóluóduō 鳩摩羅多
20.Śayata Shéyèduō 闍夜多
21.Vasubandhu Shìqīn 世親
22.Manorhita Mónáluó 摩拏羅
23.Haklenayaśas Hèlèyènàyèzhě 鶴勒夜那夜者
24.Siṃhabodhi Shīzǐpútí 師子菩提
25.Vasi-Asita Póshèsīduō 婆舍斯多
26.Puṇyamitra Bùrúmìduō 不如密多
27.Prajñātāra Bānruòduōluó 般若多羅
28.Bodhidharma Pútídámó 菩提達磨
8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூறியதை மறுக்கிறார்.
9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.
10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.
[தொகு] திரைப்படம்
தமிழில் ஏழாம் அறிவு என்னும் திரைப்படத்தில் சூர்யா போதிதருமனாக இருந்தது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
[தொகு] உசாத்துணை
• களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
• பண்டைத்தடயம், மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.
• பல்லவர் வரலாறு.
• The origin of Shaolin Kung Fu is generally credited to an Indian monk named Tat Moh, who is also sometimes known as Boddhidharma. He began life as a prince in Southern India.
• National Geographic ஆவணப்படுத்தியுள்ள "Shaolin Kung Fu" காணொளி - 9:55 முதல் 10:25
•
இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே. ஆம்! அதுதான் அவரது வலைப்பதிவின் பெயர். தமிழ்சினிமாவின் பிரபலமான தத்துவார்த்தப்பாடலின் வரிகளில் பெயர் கொண்டிருக்கும் அவரது வலைப்பதிவும், அப்பாடலின் மற்றொரு வரியில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல் ஆண்டி, அரசன், போகி, ஞானி என எல்லோரும் கூடும் இடமாகவே தெரிகிறது.இதுதான் என்ற எந்த வரைமுறையும் வைத்துக் கொள்ளாமல், எல்லாவற்றையும் குறித்துக் கேட்கின்றார், எல்லாவற்றைக் குறித்தும் தேடுகின்றார் சார்வாகன் என்பது மட்டும் அவர் வலைப்பதிவினைப் பார்க்கையில் தெரிகிறது. இவ்வளவு நாட்கள் எப்படி இந்த வலைப்பதிவைக் கண்டுகொள்ளாமல் போனோம் எண்ணத் தோன்றும் வலைப்பதிவுகளில் இதுவும் ஒன்று.
பிரபஞ்சத்தில் வேறு உயிரினங்கள் இருக்கிறதா..? பல பரிமாணங்கள் இருக்க முடியுமா? ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது சரியா? அறிவியல் என்பது என்ன? எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகும் சார்வாகன் அவற்றுக்கான தனது தேடுதல்களின்போது தாம் கண்டவைகளை, நம்முடன் அழகாகப் பகிர்ந்து கொள்கின்றார். அதற்காக தனது கருத்துக்களைத் தீர்மானமாக நம் எண்ணங்களில் திணித்து விடாமலும் பதிவு செய்கிற பாங்கு பாராட்டுக்குரியது.
எண்ணெய் இல்லா உலகம் எப்படி இருக்கும்? மனிதன் இல்லா உலகம் எப்படி இருக்கும்? நம் பூமித்தாயின் கதை என்ன? என்பவை குறித்த அவரது தேடலும், அதன் போது இணையப் பெருவெளியில் புதைந்துகிடங்கும் ஆவணங்களில் இருந்து, அவர் கண்டுகொண்ட விடயங்களும் சுவாரசியமானவை.
இவ்வாறு எல்லாத் திசைகளிலுமான தேடலுக்கான காரணத்தை அவரது கருத்துப் பகிர்வொன்றில் பகிர்ந்து கொள்ளும் போது;
"கடவுள் மறுப்புக் கோட்பாட்டாளரான புத்தர் ஒரு பகுத்தறிவுவாதிதான், இந்து மதத்தின் சாஸ்திரங்களையும், கடவுள் கோட்பாட்டையும் உதாசீனம் செய்த புத்தர் தன்னுடைய சொந்த முயற்சியில் தன் மன நிலையை உயர்த்தியதாகவே சொல்லப் படுகிறது. ஆனால் அதையும் நாம் நம்ப வேண்டியதில்லை, நாம் என்ன புத்தரின் மனதில் புகுந்து கொண்டு பார்த்தோமா, இல்லையே!
அதே நேரம் நம்முடைய மன நிலையை துன்பங்கள் தாக்காத ஒரு நிலைக்கு உயர்த்த முடியும் என்பது சாத்தியமாக இருக்க கூடுமா என்று ஆராய்வது, முயலுவது தவறில்லை என நினைக்கிறேன், இன்னும் சொல்லப் போனால் அது அவசியமும் கூட. அண்டங்களையும் , கோள்களையும் ஆராய்வது எந்த அளவுக்கு முக்கியத்துவமோ , அதே அளவுக்காவது இதுவும் முக்கியமாகக் கூடும், ஏனெனில் இது நமது சொந்த வாழ்க்கைக்கு மிகவும் உதவக் கூடியதே.
பூமி சூரியனை சுற்றுகிறதா, அல்லது சூரியன் பூமியை சுற்றுகிறதா என்கிற ஆராய்ச்சியால் நம் வாழ்க்கையில் நாம் பெறுகின்ற நன்மையை போல, துன்பங்களால துயர் படாத நிலைக்கு நம் மனதை அடைய செய்வது (அப்படி முடியுமானால்) நம் வாழ்க்கைக்கு பல மடங்கு நன்மையைத் தரும் அல்லவா? " எனப் பகிர்ந்து கொள்ளும் போது நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த வலைப்பதிவு பற்றி இன்னமும் சொல் நிறையவே உள்ளள போதும், இவ்வாறான பல மனிதர்களின் தேடல்களில்தான உலகம் புதுப்பிக்கப்படுகின்றது. அதே போல் இவ்வாறான மனிதர்களை பிறருக்கு அறிமுகம் செய்து வைப்பதனால் நட்பு பெருமிதப்படுகிறது. அத்தகைய பெருமிததத்துடன் இந்த வலைப்பதிவினை எமக்கு அறிமுகம் செய்து வைத்த தேவியர் இல்லலம் வலைப்பதிவர் ஜோதிஜி அவர்களுக்கு நன்றிகள்.
இனி ஆற்றல் அரசு எனும் சார்வாகனின் சமரசம் உலாவும் இடத்துக்குச் செல்வோம்
அமெரிக்க இரட்டைக்கோபுர தகர்ப்பு : 10ம் வருட நினைவஞ்சலியும் தலைநிமிரும் புதிய கட்டிடமும்
2001 செப்டெம்பர் 11ம் திகதி, அல்கைதா குழுவினரால் விமானம் மூலமாக தகர்க்கப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில் 2,980 பொதுமக்கள் பலியாகினர்.
இத்தாக்குதலின் மூளையாக செயற்பட்ட ஒசாமா பின் லாடன், அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இவ்வருட நினைவு தினம் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறித்த இரு இரட்டைக்கோபுரங்களும் நிலைகொண்டிருந்த வளாகத்தில் உருவாக்கப்பட்டு வரும் புதிய கோபுரம், எதிர்வரும் 2013ம் ஆண்டு முழுமை பெற்று உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளது. இக்கட்டிடம் Freedom Tower அல்லது One World Trade Center என இது அழைக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் இக்கட்டிடத்தின் 45 வது மாடி முழுமையாக்கப்பட்டது. இக்கட்டிடம் திறக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடமாக அறிவிக்கப்படவுள்ளது.
2013 இல் கட்டிடத்தோற்றம் (கணணி வடிவம்)
இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான 9/11 ற்கான தேசிய நினைவு மையம் (The National 9/11 Memorial ) நாளை செப்.12ம் திகதி திறக்கப்படவிருக்கிறது.
இரட்டைக்கோபுரங்கள் நிலைகொண்டிருந்த அதே தரைப்பகுதியில் இரு அமிழ்ந்த நீர்த்தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை சுற்றிவர நீர்வீழ்ச்சியடைவது போன்ற வடிமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய செயற்கை நீர்வீழ்ச்சியாக இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
செப்.11 தாக்குதலில் உயிரிழந்த 2,980 பொதுமக்களின் பெயர்கள், பென்சுல்வேனியா பெண்டகன் கட்டிட தாக்குதலில் உயிரிழந்த 93 பேரின் பெயர்கள் மற்றும் 1993 பெப்ரவரியில் இடம்பெற்ற தாக்குதலின் போது பலியான இரட்டைக்கோபுர கட்டிட பணியாளர்கள் 6 பேரின் பெயர்கள் என இத்தடாகங்களை சுற்றிவர எழுத்துக்களாக பொறிக்கப்பட்டிருப்பது, இந்நினைவு மையத்தின் சிறப்பம்சமாகும். இவை அகர வரிசைப்படியோ அல்லது கணித முறைப்படியோ அல்லாது, உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் உள்ள உறவுமுறை தொடர்பை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அருகருகில் அவர்களின் பெயர்கள் பதியப்பட்டுள்ளன.
மேலும் இரட்டைக்கோபுர தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், விடீயோ பதிவுகள் அடங்கிய அருங்காட்சியமொன்றும் திறக்கப்படவிருக்கிறது.
நியூயோர்க்கிற்கு வருகை தரும் அதிக வெளிநாட்டு பயணிகள் பார்வையிடும் இடமாக புதிய Freedon Tower கட்டிடமும், 9/11 நினைவு மையமும் மாற்றம் பெற்றிருக்கின்றன.
எனினும், அவை கவர்ச்சியின் நிமித்தமோ, அல்லது சுற்றுலா தளமாகவோ பார்வையாளர்களால் ஈர்க்கப்படவில்லை.
மாறாக அமெரிக்கர்கள் மத்தியில் ஏற்பட்ட மாறாத வலியின் வடுவாகவே அவை பார்க்கப்படுகின்றன என்கிறார் செப்.11 தாக்குதல் நினைவு மையம் மற்றும் அருங்காட்சியம் அமைக்கும் திட்டப்பணிப்பாளர் ஜோ டெனியெல்ஸ்.
அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதல் சம்பவத்தை நேரடியாக படம்பிடித்தது, பாதிக்கப்பட்டவர்களின் அவசர உதவிக்குரல் கோரிக்கைகள், ஆம்புலன்ஸ் கோரிக்கைகள் என்பவற்றையும் பின்னணி இசையாக இணைத்து, பொதுமக்களில் ஒருவனின் பார்வையில் அந்த ஆபத்தான தருணம் எப்படி உணரப்பட்டது என்பதை குறும்படம் போல் காட்சிப்படுத்திய டேவிட் வோல்கர் மற்றும் ஈவன் ஆகியோர் இணைந்து தயாரித்த இந்த வீடியோ தொகுப்புக்கு Crystal Morning: September 11th, 2001 என்று பெயரிட்டிருந்தனர்.
இதை பார்க்கும் போது 2001 இல் இடம்பெற்ற தாக்குதலின் நினைவுகள் நிச்சயம் உங்கள் கண் முன் மீண்டும் வந்து போகும் என்கிறார்கள் இதன் விமர்சகர்கள்.
உலக சினிமாக்களில் நியூயோர்க் இரட்டைக்கோபுரத்தின் கதாபாத்திரம்
1969 தொடக்கம் 2001 வரை அமெரிக்க இரட்டைக்கோபுரம் உலக சினிமா திரைப்படங்களில் எப்படியெல்லாம் வந்து சென்றன என்பதை தொகுத்திருக்கிறார் இக்கலைஞர்
ஆயுதம் வழங்கி தீவிரவாதத்தை வளர்த்துவிட்டு, தன் சொந்த நாட்டு மக்கள் மீதே அதன் தாக்கம் உணரப்பட்ட பின்னர் கூட வருத்தப்பட்டுக்கொள்வதாக தெரியவில்லை. மாறாக அமெரிக்க ஹீரோயிஸத்தையும், சுற்றுலாத்துறையும் விளம்பரப்படுத்த செப்.11 எனும் ஒரு புதிய திகதி கிடைத்திருக்கிறது அவ்வளவு தான்! என்கிற மாற்றுக்கருத்தும் காதுகளுக்கு எட்டியிருப்பதை மறுக்க முடியவில்லை





























0 comments:
Post a Comment