flashvortex

Sunday, October 30, 2011

சிறீலங்காவை கடுமையாக எச்சரிக்கும் கனடா



Paristamilசிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் கனடா அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என கனடா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் சந்திப்புக்கு முன்னர், குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

சிறீலங்காவின் மனித உரிமை விவகாரத்தில் கனடா வெறுமனே வார்த்தைகளினால் கருத்துக்களை வெளியிட்டு அமைதி காக்காது என கனேடிய வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக செயல் ரீதியான பங்களிப்பினை கனடா வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறீலங்வின் விவகாரம் தொடர்பிலான கனடாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் குறிப்பிட்ட அவர், சிறீலங்கா அரசு இதனை செய்ய தவறும் பட்சத்தில் சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமர்வுகளில் பங்கேற்பது குறித்து மீள சந்திக்க நேரிடும் எனவும் கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா விவகாரத்தில் கனடா வெறும் வார்த்தைகளினால் மட்டும் எதிர்ப்பை வெளியிடுவதில் அர்த்தமில்லை என கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா தொடர்பில் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே இலங்கையில் ஆளும் தரப்பினருக்கு கனடாவின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார்.

உலக மனித உரிமைகளுக்காக கனடா உரக்கக் குரல் கொடுக்கும் எனவும், குறிப்பாக இலங்கை விவகாரத்தில் கனடா தனியான கரிசனை காட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons