flashvortex

Saturday, November 26, 2011

அமெரிக்க - கூட்டமைப்பின் உள்ளார்ந்த ரகசியம் அம்பலம்? : சீற்றத்தில் இலங்கை


அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளுக்கு சென்று தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கேட்டு பல சுற்று பேச்சுக்களை நடாத்தியிருந்தனர்.

அந்த வகையில் கூட்டமைப்பினரினால், அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒக்டோபர் மாத பிற்பகுதியில் அமெரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிற்குச் சென்று அங்கு உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர். அத்துடன், இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவை தொடர்பிலான அரசின் செயற்பாடுகள் என்பன பற்றிக் குறிப்பிட்டு விசேட அறிக்கை ஒன்றையும் கூட்டமைப்பினர் ராஜாங்கத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்த அறிக்கையின் ஒரு பிரதியே இப்போது இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'அரசைக் கடுமையாக விமர்சித்து, தவறான தகவல்களை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் உள்ளடக்கம்'' அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்திருப்பதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி முயற்சிகளுக்கான பேச்சுகள் ஒருபுறம் நடைபெறும் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான செயற்பாடுகள் பெரும் அதிருப்தி தருவதாக அமைந்துள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons