நீண்ட நெடுங்காலமாக சதத்தில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் இம்முறையும் ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.இந்திய, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நான்காம் நாளான இன்று, நேற்றைய 67 ஓட்டங்களுடன் ஆட்டத்தை துவக்கிய சச்சின் டெண்டுல்கர் நிதானமாக ஓட்டங்களை சேர்த்து வந்தார்.
அவர் 90 ஓட்டங்களை கடந்தவுடன் எப்படியும் சதமடிப்பார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இருப்பினும் 94 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரவி ராம்பால் பந்து வீச்சில், மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் சமியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் சதத்தில் சதமடிப்பார் என்று எதிர்பார்த்த துடுப்பாட்ட ரசிகர்களை அவர் மீண்டும் ஏமாற்றியுள்ளார்.




3:38 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment