flashvortex

Monday, December 12, 2011

சனத் ஜெயசூரியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அமைச்சர்கள்


சபாநாயகர் வெற்றிக்கிண்ணத்திற்காக கொழும்பில் இன்று நடைபெற்ற இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் சபாநாயகர் கிண்ணத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் சுவீகரித்துக் கொண்டனர்.


நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் அணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அணியினரை துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்றது.

177 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய அமைச்சர்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி 71 ஓட்டங்களால் சபாநாயகர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.

ஆட்ட நாயகனாக டலஸ் அழகப்பெருமவும் சிறந்த பந்து வீச்சாளராக ஹர்ஷ டி சில்வாவும் தெரிவானார்கள்.

சபாநாயகர் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று முதன் முதலாக நடைபெற்றமை இங்கு சிறப்பம்சம்.


0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons