flashvortex

Saturday, January 21, 2012

காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கக் கோரி மெழுகுவர்த்திப் போராட்டம் : 24 ஆம் திகதி கொழும்பில்... _

 காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக மெழுகுவர்த்தி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேற்படி குழு விடுத்துள்ள அறிக்கையில், 


"காணாமல் போனவர்கள் தொடர்பாக எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கும் போராட்டம் ஒன்று காணாமற் போனோரை தேடியறியும் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரகீத் எக்னெலிகொட ஊடகவியலாளர் கடத்தப்பட்டு இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டும் ஏனைய காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் போன்றோரின் விடுதலை குறித்தும் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக காணாமற் போனவர்களின் புகைப்படங்களுடன் மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டம் ஆரம்பமாகி செக்கடித் தெரு அன்னை வேளாங்கண்ணி ஆலயம் வரை அமைதி ஊர்வலம் செல்லும்.

எனவே காணாமல் போனவர்களின் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தமது உறவுகளின் விடுதலை வேண்டி இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் காணாமற் போனவர்களின் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு, தமது உறவுகளை மீட்டெடுப்பதற்கான அழுத்தத்தைக் கொடுக்க எம்முடன் கைகோர்க்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons