தென்னாபிரிக்காவிற்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கிம்பர்ளி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் வெற்றி இலங்கை அடைந்தது.
இலங்கை அணிசார்பில் அணித்தலைவர் திலகரட்ன தில்ஷான் 87பந்துகளில் 2 சிக்ஸர்கள் 9 பௌண்டரிகள் உட்பட 87 ஓட்டங்களைப் பெற்றார். தினேஸ் சந்திமால் 81 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பெற்றார்.
திசேர பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களைப் பெற்றார். ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றார்.
தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் சோட்சோப் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக திசேர பெரேரா தெரிவானார்.
இத்தொடரின் இறுதிப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை ஜொஹான்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ளது.`




7:11 PM
jana
Posted in: 

0 comments:
Post a Comment