முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இன்றைய போட்டியில், இலங்கை அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, வெற்றி கண்டது.
அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை பங்கேற்கும் ஒரு நாள் கிரிக்கட் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது.
இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை-இந்தியா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கை அணி 50 ஓவரில் 289 ஒட்டங்கள் எடுத்து, 290 ஒட்டங்களை வெற்றி இலக்காக வைத்தது.
பின்னதாக களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே தடுமாறினார்கள்.
அணித் தலைவர் விரேந்திர சேவாக் ஓட்டம் ஏதும் பெறாமல் 2வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து, இந்திய அணி அடுத்தடுத்து விக்கட்களை இழந்து 45.1 ஓவரில் அனைத்து விக்கட்களையும் இழந்து 238 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
ஆட்டநாயகன் விருதை இலங்கை வீரர் குலசேகரா வென்றார். இலங்கை அணி, இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், புள்ளிகள் பட்டியலில் 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
10 புள்ளிகளுடன் இந்தியா 3 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 14 புள்ளிகளுடன், அவுஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.




9:10 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment