ஜெனிவா ஐ.நா.முன்றலில் நேற்று நடைபெற்ற நீதிக்காய் ஒன்றிணைவோம் என்ற கவனஈர்ப்பு பேரணி மற்றும் ஒன்றுகூடலில் சிரியாவில் அண்மையில் கொல்லப்பட்ட பெண் ஊடகவியலாளர் மேரி கொல்வினுக்கும், 2009ல் ஜெனிவா அரங்கில் தீக்குளித்து உயிர்நீத்த முருகதாஸிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளைச்சேர்ந்த மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
ஊடகவியலாளர் இறுதிவரை தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் பற்றி தெளிவான புரிதலும் செயற்பட்டார் என்றும், அவரின் இழப்பு ஈழத்தமிழினத்திற்கு பேரிழப்பாகும் என்றும் அங்கு கூடியிருந்த தமிழ் மக்களால் நினைவு கூரப்பட்டது.
இதேவேளை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி லண்டனிலிருந்து நடைப்பயணம் மேற்கொண்டு ஜெனிவா முன்றலை சென்றடைந்த ஜெய்சங்கரும் கௌரவிக்கப்பட்டார்.










6:37 AM
jana
Posted in: 

0 comments:
Post a Comment