ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறீலங்கா தொடர்பிலான முக்கியமானதொரு உரை இடம்பெறும் பெறக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்ற நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரைகளை அடிப்படையாக வைத்து இந்த விவாதங்கள் இடம்பெறவுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 9 மணியளவில் சிரியா நிலைமை தொடர்பாக இரண்டு மணி நேர அவசர விவாதம் ஒன்று இடம்பெறும்.
இதையடுத்து 11 மணி தொடக்கம் 12 மணி வரையும், மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரையும் உயர்மட்ட பிரதிநிதிகளின் உரைகள் இடம்பெறவுள்ளது.
இன்றையதினம் அமெரிக்காவின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ்நிலைச்செயலர் மரியா ஒரேரோ உரை நிகழ்த்தவுள்ளார். இதன்போது சிறீலங்கா தொடர்பிலான தமது நிலைப்பாட்டை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை தமக்கெதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் சிறீலங்கா அரச பிரதிநிதிகள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருக்கின்றனர்.




7:37 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment