flashvortex

Friday, March 2, 2012

நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை துரிதப்படுத்துமாறு அமெரிக்கா கோரிக்கை

சிறீலங்கா தனக்கான காலத்தை நழுவ விட்டுள்ளதாக அமெரிக்காவின் பொதுமக்கள் காப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான செயலர் மரியா ஒட்ரோ தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் சிறீலங்கா அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக்க கட்டப் போர் நிறைவுற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது. சிறீலங்கா உடனடியாக ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயலில் கொண்டுவர வேண்டும் எனவும் மரியே தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons