நேற்று பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான
பரபரப்பான போட்டி சமநிலையில் முடிவுற்றது .
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுபெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சகலவிக்கெட்டுகளையும்
இழந்து 338 ஓட்டங்களை பெற்றது .இந்தியா அணி சார்பில் சச்சின் டெண்டுல்கர் 120 ஓட்டங்களை பெற்று கொடுத்தார் .இது சச்சின் பெரும் 47 வது சதமாகும் .
இங்கிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ப்றேஷ்ணன் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார் .
339 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுபெடுத்தாடிய இங்கிலாந்த் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை பெற்றது இதனால் இரு அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்றது .
இங்கிலாந்த் அணி சார்பில் அணித் தலைவர் அன்ருஸ்ட்ராஸ் 158 ஓட்டங்களை பெற்று போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார் .
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டு இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது .இன்று நடை பெற இருக்கும் போட்டியில் மேற்கிந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றனர் .




1:57 AM
jana


0 comments:
Post a Comment