flashvortex

Thursday, March 3, 2011

டெங்கு நோயால் இரண்டு மாதங்களில் 18 பேர் பலி

நாட்டின் பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் 1722 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் பலியாகி உள்ளதாக சுகாதார அமைச்சின் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்தது.

கொழும்பு கம்பஹா புத்தளம் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக அப்பிரிவு மேலும் தெரிவிக்கின்றது.

கடந்த வருடத்தின் நவம்பர் டிசம்பர் மாதங்களில் டெங்கு நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை பெரிதும் குறைவடைந்து காணப்பட்டது.

குறிப்பிடப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு மற்றும் தவிர்ப்பு நடவடிக்கைகள் இதற்கு பெரிதும் உதவின.கடந்து இரு மாதங்களிலே
இதற்கு அதிகமானோர் பாதிக்க பட்டுள்ளனர் .

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons