flashvortex

Friday, October 28, 2011

கடாபி உள்ளிட்ட மூவரின் உடல்கள் லிபியாவில் ரகசிய இடத்தில் புதைப்பு

லிபியா முன்னாள் தலைவர் கடாபி உள்ளிட்ட மூவரின் உடல்கள், நேற்று அதிகாலையில் ரகசிய இடம் ஒன்றில் புதைக்கப்பட்டன.

லிபியா முன்னாள் தலைவர் கடாபி, அவரது மகன் முட்டாசிம், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அபு பக்கர் யூனுஸ் ஜாபர் ஆகியோர், கடந்த 20ம் தேதி எதிர்ப்பாளர்களால் கொல்லப்பட்டனர். இவர்களில் கடாபி மற்றும் அவரது மகனின் மரணங்கள் சர்ச்சைக்குள்ளாயின. கடாபி மற்றும் அவரது மகனின் உடல்கள் குறித்து இடைக்கால அரசு பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வந்தது. கடாபியின் குடும்பத்தார், இருவரது உடல்களையும் தர வேண்டும் எனக் கோரியிருந்தனர்.தொடர்ந்து, கடாபி உள்ளிட்டோரின் பிரேத பரிசோதனைகள் நடந்தன.


கடாபி கொல்லப்பட்ட பின் அவர் மற்றும் இருவரின் உடல்களும் நான்கு நாட்களாக மிஸ்ரட்டா நகரில் உள்ள இறைச்சி சந்தையின் குளிரூட்டும் அறையில் வைக்கப்பட்டிருந்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சாரிசாரியாக வந்து கடாபியின் உடலை நேரில் பார்த்து சென்றனர். ஆனால், மூவரது உடல்களும் நேற்று முன்தினம் முதல் அழுக ஆரம்பித்து விட்டன. இதனால், அவற்றை புதைப்பது என இடைக்கால அரசு முடிவு செய்தது. அதன்படி, நேற்று அதிகாலை, மூவரது உடல்களும் ரகசிய இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ரகசிய இடத்தில் கடாபியின் உறவினர்கள், அரசின் அதிகாரிகள் சிலர் இருந்தனர். நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி, 5 மணிக்கு மூவரது உடல்களும் அந்த ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டன.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons