flashvortex

Friday, October 28, 2011

போர்க் குற்றம் தொடர்பில் கிலாரி கிளின்டனிடம் கோரிக்கை

சிறீலங்காவுக்கு எதிரான போர் குற்றங்களை விலகிக் கொள்ள வேண்டாம் எனக் அமெரிக்க இராஐங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் மேற்கண்ட கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினை மேற்கொள் காட்டி திவியின செய்தி வெளியிட்டுள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஹிலரி கிளின்டனுக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் முன்னர், இந்த மகஜர் வழங்கப்பட்டுள்ளது. 
கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்த மகஜரை அனுப்பி வைத்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் 13 வது அரசியலமைப்பு திருத்தம் குறித்து கவனம் செலுத்துவதில் பயனில்லை எனவும் தமிழ் மக்களுக்கு சுயாட்சியே தேவை எனவும் அந்த மகஜரில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons