flashvortex

Tuesday, December 27, 2011

உயர்தர பரீட்சை முடிவுகள் ஏற்படுத்திய அதிர்வலைகள்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான க.பொ.த.உயர்தரப் பெறுபேறுகளில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக மாணவர்களிடையே பெரும் குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தமது பெறுபேறுகளையிட்டும் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏற்கனவே குறிப்பிட்ட பெறுபேறுகளை வெளியிடுவதில் பெரும் இழுத்தடிப்புகள் பேரம் பேசல்கள் என பல சர்சைகளின் அடிப்படையில், பெறுபேறுகள் நள்ளிரவு நேரம் இனையத்தளத்தில் வெளியிடப்பட்டதுடன் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று பெறுபேறுகள் பரீட்சைத் தினைக்களத்தினால் அதிபர்களிடம் கையளிக்கப்படாத நிலமையும் காணப்பட்டது.

புதிய பரீட்சையாணையாளர் வந்ததும் இந்த பெறு பேறுகளை வெளியிட்டபோதிலும் மாணவர்களின் மாவட்ட நிலை மற்றும் தேசிய நிலையையிட்டு பாரிய குழப்பம் காணப்பட்டது.

இது தொடர்பில் பலரும் பரீட்சைத் தினைக்களத்துடன் தொடர்பு கொண்டு முறையிட்ட நிலையில் உடனடியாக குறிப்பிட்ட மாவட்ட, தேசிய நிலை மட்டங்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டதுடன் அன்றே உடனடியாக மீண்டும் புதிய மாவட்ட நிலைகள் இனையத்தில் இனைக்கப்பட்டன.

இதில் ஏற்கனவெ வெளியான பெறுகளில் பின்தங்கி இருந்த மாணவர்கள் பல நூறு நிலைகளை தாண்டி முன்னுக்கு வந்த போதிலும் தேசிய நிலையில் மாற்றங்கள் காணப்படவில்லை.

புதிய பாடத்திட்டத்திற்க்கு தோற்றிய பல மாணவர்களின் பெறுபேறுகள் ஆசிரியாகள் எதிர்பார்த்தமைக்கு அமைவாக அமையாததுடன் மிகவும் மோசமான பெறுபேறுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இம் முறை வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இலங்கை முழுவதும் உள்ள மாணவர்களை உடல் உள ரீதியாக கடுமையாக பாதித்துள்ளதுடன் பரீட்சைத் தினைக்களத்தின் செயல்பாடுகளிலும் அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு பாடத்திட்டங்களின் கீழ் இரண்டு விதமான பரீட்சைகளை நடத்திய நிலையில் மாணவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்பு பற்றிய முழுமையான செயல் திட்டம் இது வரைக்கும் பகிரங்கப்படுத்தப்படாத நிலை காணப்படுவதினால் பெற்றோர்களும் மாணவாகளும் பெரும் குழப்பமான நிலையில் காணப்படுகின்றார்கள்.

இரண்டு பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சை இடம் பெற்றமையால் பல்கலைக்கழகத்திற்கான அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் இரண்டு பிரிவாக வெளியிடப்படுமா? அல்லது ஒரே பிரிவாக வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படுமா? என்பதும் இதுவரைக்கும் பரீட்சைத் திணைக்களத்தினாலோ அல்லது உயர் கல்வி அமைச்சினாலோ பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்படாத நிலமையும் காணப்படுகின்றது.

இம்முறை இடம் பெற்ற புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆங்கில மொழி மூலம் தேசிய மட்டத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு கணிசமான அளவு மாணவாகள் தோற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons