flashvortex

Saturday, December 17, 2011

கடாபி மரணம்: சர்வதேச கோர்ட் விசாரிக்க கோரிக்கை


தன்னுடைய தந்தையும், சகோதரனும் கொல்லப்பட்டது குறித்து, சர்வதேச கோர்ட் விசாரிக்க வேண்டும் என, லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகள் கோரியுள்ளார்.

லிபிய முன்னாள் அதிபர் கடாபி, கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி, போராட்டக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன் முட்டாசிம் கடாபியும் கொல்லப்பட்டார். கடாபியின் மனைவி சபியா, மகள் ஆயிஷா உள்ளிட்டோர், அல்ஜீரியாவில் மனிதாபிமான அடிப்படையில், தஞ்சம் அடைந்துள்ளனர்.



தனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கொன்று குவித்ததாக, சர்வதேச கிரிமினல் கோர்ட், கடந்த ஜூன் மாதம், கடாபிக்கு சம்மன் அனுப்பியது. இது குறித்து, கடாபியின் மகள் ஆயிஷா, சர்வதேச கிரிமினல் கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். "என் தந்தையும், சகோதரனும் உயிரோடு பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட போது, அவர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. எனினும், அவர்களை சுட்டுக் கொன்று விட்டனர். இது குறித்து, சர்வதேச கோர்ட் விசாரிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons