மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வரையறுக்கப்பட்ட அளவில் வழங்குவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களின் போது ஆராய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவையின் பேச்சாளர் ஹகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் சில வரையறைகளுக்குள் செல்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை முழுமையாக வழங்குவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்ட சில பகுதி அதிகாரங்களை வழங்குவது பிரச்சினையாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுக்களில் மூன்று விடயங்களே சர்ச்சைக்குரியவையாக இருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவது என்பதுடன், வடக்கு - கிழக்கு இணைப்பு என்பனவே இவ்வாறு சர்ச்சைக்குரி யனவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியிலேயே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பொறுத்தவரையில் தமது முன்னைய இறுக்கமான நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டு மென் போக்கை அரசாங்கம் இப்போது வெளியிட் டுள்ளது. அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் படி சிறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள் வதற்கான அதிகாரம் மாகாண பொலிஸாருக்கு வழங்கப்படும். அத்துடன் காணி விவகாரத்தைப் பொறுத்தவரையில் காணி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும். இதனைவிட வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரத்தை ஏற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவில்லை. அது தொடர்பாக ஆராய்வதற்கே அரச தரப்பு மறுத்து விட்டதாகத் தெரிகின்றது.




6:24 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment