கடந்த சில தினங்களாக கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரியில் நிலவி வந்த அதிபருக்கான போட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அடிதடியில் முடிவுற்ற சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இக் கல்லாரியின் அதிபராக இருந்த திரு.மன்மதராஐாவின் பதவி விலகலை தொடர்ந்து அவரின் மனைவியான திருமதி.மன்மதராசா தற்காலிகமாக அதிபராக நியமனம் பெற்றார். இவரின் நியமனம் தொடர்பில் அதிருப்தியுற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் பாணாந்துறையில் கடமையாற்றிய திரு.உதயகுமார் என்பவர் தான் பாடசாலையின் புதிய அதிபர் என அடாவடித்தனமாக பாடசாலைக்குள் பிரவேசித்து தனது கடமைகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் பெருந்திரளான மக்கள் கூடியதுடன் கல்கிசை பொலிஸாரின் உதவியுடன் அவர்கள் கலைக்கப்பட்டுள்ளனர்.
இது ஓர் இந்துக் கல்லூரி என்பதால் இங்கு கடமையாற்றும் அதிபர் ஒர் இந்துவாக இருக்க வேண்டும் என்பது இந்து வித்தியா சங்கம் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் உள்ளது. அதனை மீறும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
இது ஓர் பூதாகரமாக வெடிக்க ஒன்று கூடினர் அரசியல் தலைமைகள்.
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை சந்திந்த பாடசாலை நிர்வாகம் இப் பிரச்சினை தொடர்பில் விளங்கப்படுத்த ஐனாதிபதியை சந்திக்கும் ஏற்பாடுகளை அவர் மேற்கொண்டிருந்தார்.
நேற்றைய தினம் ஐனாதிபதியுடன் சந்தித்துப் பேச்சுவார்தையில் ஈடுபட்டவேளை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை தொடர்பு கொண்ட ஜனாதிபதி, உதயகுமாரின் நியமனத்தை ரத்து செய்து, ஷர்மாவுக்கு நியமனம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
திரு.உதயகுமாரின் நியமத்தின் பின்னணில் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஈடுபட்டுள்ளார். |
0 comments:
Post a Comment