flashvortex

Friday, January 13, 2012

இந்திய கிரிக்கட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த சச்சின்!

பத்து மாதங்களாகவே தன்னுடைய 100வது சதத்தை அடிக்க முடியாமல் சற்று தடுமாறி வருகிறார் சச்சின்.அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு முன்பே அவர் சதம் அடிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
 
ஏனெனில் அப்போது தான் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவருக்கு நெருக்கடி இருக்காது என கிரிக்கட் விமர்சகர்களும் கூறினர்.
 
இருந்தபோதிலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
 
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சச்சின் விளையாட வேண்டுமென இந்திய கிரிக்கட் வாரியம் விருப்பம் தெரிவித்ததாகவும், இந்த கோரிக்கையை சச்சின் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு முழு உடல்தகுதி பெறுவதற்காக இந்த முடிவை சச்சின் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons