flashvortex

Tuesday, January 31, 2012

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் சாம்பியன் யொக்கோவிச்

100 ஆவது அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்திதை கடும் சவாலுக்கு பின்னர் செர்பியாவின் நொவெக் யொக்கோவிச் வென்றெடுத்துள்ளார்.


107 வருடகால வரலாற்றைக் கொண்ட அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் தொடரில், நீண்ட நேரம் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் ரபெயல் நடால் தோல்வியடைந்தார்.


சுமார் ஐந்து மணித்தியாலங்கள் 53 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் மூன்றுக்கு இரண்டு என்ற செட்கணக்கில் யொக்கோவிச் வெற்றிபெற்றார்.


போட்டியின் முதல் செட்டை 7 க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் ரபெயல் நடால் வெற்றிகொண்டார்.


எனினும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய யொக்கோவிச் இரண்டாம் மற்றும் மூன்றாம் செட்களை 6 க்கு 4, 6 க்கு 2 என தன்வசப்படுத்தினார்.


யொக்கோவிச்சிற்கு கடும் சவாலாக விளங்கிய ரபெயல் நடால் நான்காவது செட்டை 7 க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிகொண்டார்.


எனினும் விறுவிவிப்பாக நடைபெற்ற தீர்மானமிக்க ஐந்தாவதும், இறுதியுமான செட்டை 7 க்கு 5 என கைப்பற்றிய யொக்கோவிச் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சாம்பியன் பட்டத்தைச் சுவீகரித்தார்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons