flashvortex

Wednesday, February 1, 2012

ஸ்பெயினில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்தது

ஸ்பெயினில் வேலையில்லா நபர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய புள்ளிவிபர சேவை நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின் படி, அந்நாட்டில் கடந்த 2011 ம் ஆண்டு, டிசம்பர் முடிவடையும் போது 5.3 மில்லியன் மக்கள் வேலையில்லா பிரச்சினையை எதிர்கொண்டிருந்ததாகவும், 17 வருடங்களில் அந்நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் பாதிப்பு இது எனவும் தெரிவித்துள்ளது.

 பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கும், ஐரோப்பிய வலயத்தின் 17 நாடுகளில் வேலையில்லா பிரச்சினையை மிக தீவிரமாக கொண்டுள்ள நாடாக ஸ்பெயின் மாற்றம் பெற்றுள்ளது. ஐரோப்பிய வலயத்தில் வேலையில்லா பிரச்சினை கடந்த நவம்பர் ஆதம் 10.3% வீதமாக இருந்ததாகவும் இப்போது 22.8% ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்பெயினில் இருக்கும் 16-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் அரைவாசி பேர் வேலையில்லா பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் வேலையில்லா நபர்களுக்கு அரசு செய்துவரும் சமூக நிதியுதவி, வேலை செய்வோர் குறைவாக இருப்பதால் அவர்கள் மூலம் கிடைக்கும் வருமான வரியும் குறைவாக இருத்தல் என்பன ஸ்பெயின் அரசுக்கு கடும் நஷ்டத்தை கொடுத்துள்ளன.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons