மஹா வசம்சத்தில் குறிப்பிடபடாத அரச பரம்பரை தொடர்பான கல்வெட்டு ஒன்று திருகோணமலை கந்தன்கரு பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வில்கம்வெஹர பிரதேசத்தில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில், உள்ள காட்டு பகுதியில், இந்த கல்வெட்டு கிடைத்துள்ளது. உத்திய மன்னர் மற்றும் அபய குமார ஆகியோரினால் இந்த கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவிற்கு முன்னர், மூன்றாம் நூண்றாண்டில், அதாவது தேவநம்பியதீசன் மன்னர் காலத்திற்குரிய, இந்த கல்வெட்டியில், பிரம்மி எழுத்துக்களால் எழுப்பட்ட வாசகங்கள் காணப்படுகின்றன. இதனை தவிர மேலும் இரண் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. மஹா வம்சத்தில் குறிப்பிடப்படாத இந்த மன்னர் பரம்பரை குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை தொல் பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. |
0 comments:
Post a Comment