ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இடம்பெறுவதற்கு முன்னர் அமெரிக்கா மூன்று உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க உள்ளது.
இதன் அடிப்படையில் நாளையதினம் அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான தூதுவர் Steve Rapp இலங்கை சென்று, எதிர்வரும் 11 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ள நிலையில் மூன்று முக்கிய இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் முக்கியமாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்ந்து எதிர்வரும் 12 ஆம் திகதி அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக், அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான உதவி செயலாளர் மரி ஒட்டேரோ ஆகியோர் இலங்கை செல்லவுள்ளனர்.
இவர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுக்கு வழங்குவார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




2:49 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment