சிரியாவில் மோதலில் காயமடைந்து, ஹொம்ஸ் நகரில் அகப்பட்டிருந்த பிரிட்டிஷ் செய்திப் படப்பிடிப்பாளரான பால் கொன்ரோய் அவர்கள் அங்கிருந்து கடத்தப்பட்டு, எல்லைகடந்து, பாதுகாப்பாக லெபனானுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்.
முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் மாவட்டமான பாபா அம்ரில் இருந்து அவர், சிரியாவின் எதிரணி படையினரின் உதவியுடன் திங்களன்று காப்பாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் பிபிசிக்கு உறுதி செய்துள்ளன.
இவர் பாதுகாப்பாக அங்கிருந்து கடத்தி வரப்பட்ட நடவடிக்கைகளில் செஞ்சிலுவைச் சங்கத்துக்கோ அல்லது சிரியாவின் செம்பிறை அமைப்புக்கோ தொடர்பு எதுவும் கிடையாது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹொம்ஸ் நகரில் சண்டே டைம்ஸ் பத்திரிகைகாக கொன்ரோய் அவர்கள் படப்பிடிப்பாளராக பணியாற்றிவந்தார்.
கடந்த வாரம் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட மரி கொல்வின் அவர்களுடன் இவர் பணியாற்றினார்.
பாபா அம்ர் நகரில் அகப்பட்டிருந்த ஏனைய செய்தியாளர்களும் அங்கிருந்து மீட்கப்பட்டார்களா என்பது குறித்து இராஜதந்திர வட்டாரங்கள் எதுவும் கூறவில்லை.




5:25 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment