flashvortex

Tuesday, February 28, 2012

இந்தியாவில் வேலைநிறுத்தம்

இந்தியாவில் உயர் பணவீக்கத்துக்கு எதிராகவும், அரச தொழில் நிறுவனங்களை அரசாங்கம் விற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாடாளாவிய ரீதியில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவின் முக்கிய 11 தொழிற்சங்கங்களால் இந்த வேலை நிறுத்தத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், தபால் நிலையங்கள், போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றின் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலத்த ஆதரவு காணப்படுகின்ற மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இந்த வேலை நிறுத்தத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோ ரிக்ஷாக்களும் டாக்சிகளும் ஓடவில்லை.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்தத்தால் பெரும் பாதிப்பு எதுவும் கிடையாது என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons