ஆப்கானிஸ்தானில் நேற்று இடம்பெற்ற பனிப்பாறை சரிவு விபத்தில் (Avalanche) 37 பேர் பலியாகியிருப்பதுடன், மேலும் பலர் காயமடந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பதக் ஷாகானா மாகாணத்தின் மலைப்பகுதிகளிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு என்றும் இல்லாத அளவில், இம்முறை ஆப்கானிஸ்தான் கடும் குளிராலும், பனிமூட்டத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும், பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பலர் பனிப்பாறைகளின் கீழ் சிக்கி காணாமல் போயிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக மீட்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. |
0 comments:
Post a Comment