flashvortex

Tuesday, March 6, 2012

தொடரும் அமெரிக்காவின் அழுத்தம் - அதிர்ந்து போகும் சிறீலங்கா

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, மற்றும் பரிந்துரைகள், தற்போது முழுமையான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அமையவில்லை என அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் நிரந்தர சமாதானம் நிலவ வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா மீது தொடர்ச்சியாக அழுத்தங்கள் அதிகரித்து வரும் இந்நிலையில் சிறீலங்கா மீளமைப்பு நடவடிக்கைகளுக்காக கால அவகாசத்தை கோரி, காலம் கடத்தி வருவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச் சாட்டியுள்ளது.

இதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் விவகாரம் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உரிய முறையில் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்ட அமெரிக்கப் பிரதிநிதி ஜோன் சீ. மாரிஸ் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான திட்டங்கள் எதனையும் ஆணைக்குழு இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைகயானது நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons