flashvortex

Saturday, March 3, 2012

பெரியாறு அணையைப் பராமரிக்க தமிழகத்துக்கு அனுமதி: நீதிமன்றில் மனு _

 தமிழகம், கேரளா இடையேயான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றில் நேற்று 2 புதிய மனுக்களைத் தாக்கல் செய்தது.

ஒரு மனுவில்,

'முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மே மாதத்துக்குள் உடனடியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் வரவில்லை. 


ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள தொழில் நுட்ப நிபுணர்கள், அணைக்கு தேவையான மின்சாரத்தை கேரளா வழங்க வேண்டும், பேபி அணை மற்றும் பெரியாறு அணை இடையே பாதை அமைக்க வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளை அளித்துள்ளனர்.

இந்தப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வரும் தமிழக அரசு அதிகாரிகளைத் தடுக்க கூடாது என்று கேரள பொலிசார், வனத்துறை அதிகாரிகள், கேரள அதிகாரிகள் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

மற்றொரு மனுவில்,

'முல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு ஆய்வு மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. அணையின் உரிமை தமிழகத்திடம் உள்ளது. இந்த விவகாரத்தில் முன்பு இருந்த நிலையே தொடரும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் முல்லைபெரியாறு அணையில் கண்காணிப்பு கருவி அமைத்து ஆய்வு நடத்தக்கூடாது என்று மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. ___

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons