ஃபாக்லாண்ட் தீவுகள் குறித்த சர்ச்சை காரணமாக பிரிட்டனில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று ஆர்ஜன்டீனாவின் பெரிய நிறுவனங்களை ஆர்ஜடீனா அரசாங்கம் கேட்டிருப்பதாக அந்த நாட்டின் அரச ஊடகம் கூறியிருக்கிறது.
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்பப்படும் பொருட்களுக்கு பதிலாக வேறு நாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்யுமாறு அந்த நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகளை ஆர்ஜன்டீனாவின் தொழில்துறை அமைச்சர் கேட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
ஃபாக்லாண்டை தமக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை ஆர்ஜன்டீனா அண்மைய மாதங்களில் மீண்டும் முன்வைத்திருக்கிறது.
ஃபாக்லாண்ட் தீவுகளில் ஆர்ஜன்டீனாவின் ஆக்கிரமிப்பை பிரிட்டிஷ் படைகள் முறியடித்த 13 வது ஆண்டு நிறைவை ஏப்ரல் மாதத்தில் இரு நாடுகளும் நினைவு கூருகின்றன.




8:29 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment