ஜப்பானில் கடந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தின் காரணமாக ஃபுக்குஷிமாவில் இருந்த அணுமின் நிலையம் செயலிழந்த வேளையில், அந்த மின் நிலையத்தின் அதிகாரிகளும், அரசும் பீதியடைந்தனர் என, அந்த பெரும் விபத்து குறித்த ஒரு சுயாதீனமான அறிக்கையை தயாரித்துள்ளவர்கள் கூறியுள்ளனர்.
இந்த அணுமின் நிலையம் முற்றாக சேதமடைந்து, அதன் விளைவாக பெரும் சீரழிவுகள் ஏற்பட்டு தலைநகர் டோக்கியோ முழுவதையும் காலி செய்ய வேண்டிய ஒரு சூழல் கூட கடைசி தருணத்தில் தான் தவிர்க்கப்பட்டது என்றும் அந்த அறிக்கைய எழுதிய குழுவின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அணு உலை பாதுகாப்பு எனும் மாயையயில் சிக்கியிருந்த அரசாங்கம் இப்படியான ஒரு பேரழிவை எதிர்கொள்ள தயாரான நிலையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்படாவிட்டாலும், உணவுச் சங்கிலியில் கதிரியக்க பாதிப்பு ஏற்படலாம் என்ற கவலைகள் பெரிதாக எழுந்தன.
இந்த விபத்துக்குப் பிறகு புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதில்லை என்று ஜப்பான் முடிவுசெய்தது. இதேபோன்ற முடிவுகளை ஜெர்மன் எடுக்கவும் இந்த விபத்து காரணமாக அமைந்தது.




8:32 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment