flashvortex

Wednesday, March 14, 2012

போர் குற்றங்கள்:சர்வதேச நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பு

காங்கோவின் கிளர்ச்சிக் குழுவின் தலைவரான தாமஸ் லுபாங்கா போர் குற்றங்கள் புரிந்தார் என்று தீர்ப்பு வந்துள்ளது.
தி ஹேகிலிருந்து செயல்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பத்தாண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட நிலையில் வழங்கியுள்ள முதல் தீர்ப்பில் தாமஸ் லுபாங்கா குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளது.
பதினைந்து வயதுக்கு கீழேயுள்ள சிறார்களை படைகளில் சேர்த்து, அவர்களை சிறார் போராளிகளாக பயன்படுத்தினார் என்பதான குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடகிழக்குப் பகுதியில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் உக்கிரமான இனமோதல்கள் வெடித்தபோது இந்தக் குற்றங்கள் இடம்பெற்றன.
பின்னொரு நாள் நடைபெறும் ஓர் அமர்வில் நீதிபதிகள் தாமஸ் லுபாங்ககாவுக்கான தண்டனையை அறிவிப்பார்கள்.
இதேவேளை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் 2005 ஆம் ஆண்டு உகாண்டாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவரான ஜோசஃப் கோனிக்கு எதிராக தனது முதல் கைது உத்தரவை பிறப்பித்தது.
ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் அவரது 'லார்ட்ஸ் ரெஸிஸ்டன்ஸ் ஆர்மி' பல அட்டூழியங்களை இழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர் இன்னமும் பிடிபடாமல் இருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons