போலீஸ் அதிகாரிகளைப் பாதுகாக்க உறுதியான சட்டம் தேவை என்பதை வலியுறுத்தி, வரும் 18ம் தேதி அன்னா ஹசாரே டில்லியில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்.
வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்திய காந்தியவாதி அன்னா ஹசாரே, 74. கடந்த டிசம்பர் மாதம் மும்பையில் மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினார். ஆனால், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால், போராட்டத்தை தொடர முடியவில்லை. மத்திய பிரதேச மாநிலத்தில் சுரங்க மாபியா கும்பலை பிடிக்க முயன்ற, நரேந்திரகுமார் என்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கடந்த வாரம் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். போலீஸ் அதிகாரிகளைப் பாதுகாக்க உறுதியான சட்டம் தேவை என்பதை வலியுறுத்தித்தான் அன்னா ஹசாரே, வரும் 18ம் தேதி டில்லி ஜந்தர் மந்தரில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார். இப்போராட்டத்தில் பங்கேற்க கொலை செய்யப்பட்ட, போலீஸ் அதிகாரி நரேந்திரகுமாரின் குடும்ப உறுப்பினர்களையும், அன்னா குழு அழைத்துள்ளது.




6:52 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment