உருளைக்கிழங்கிற்கான வரியை அரசு பத்து ரூபாவால் அதிகரித்துள்ளது. இந்த வரி அதிகரிப்புக்கு அமைய இதுவரை இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கிற்கு இருந்த 20 ரூபா வரியை அரசு மார்ச் முதலாம் திகதி முதல் 30 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மஹிந்த சிந்தனைக்கு அமைய உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் உருளைகிழங்கிற்கான இறக்குமதி வரி பத்து ரூபாவிலிருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது 20 ரூபாவிலிருந்து இறக்குமதி வரி 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் அரிசிக்கான இறக்குமதி வரியையும் அதிகரிப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் யாப்பா தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விவசாயிகளின் உற்பத்திக்கு மதிப்பளித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே அரிசிக்கான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.




6:45 AM
jana
Posted in: 

0 comments:
Post a Comment