இலங்கையில்"ஆட்சி மாற்றம்' மட்டுமே மேற்குலகின் விருப்பமாக உள்ளது என்று இலங்கையின் தூதுவரும் ஐ.நா.வுக்கான ஜெனீவாவிலுள்ள நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான தமரா குணநாயகம் கடுமையாகச் சாடியுள்ளார். "அவர்களின் உண்மையான நோக்கம் ஆட்சி மாற்றமே. ஜெனீவாவிலுள்ள தூதுவர்கள் பலர் இலங்கையில் தாங்கள் இதனையே வென்றெடுக்க விரும்புவதாக எனக்குக் கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆதலால் இந்த விடயத்தை நாங்கள் மிகத் தீவிரமான விடயமாக எடுத்துக்கொள்கிறோம். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக "பாதுகாப்பதற்கான பொறுப்பு' அல்லது கீ2க என்ற கோட்பாட்டை அமுல்படுத்த அமெரிக்கா நாடியிருந்தது. நாடுகள் மீது இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்த இந்தக் கோட்பாட்டை அமுல்படுத்த அமெரிக்கா நாடுகிறது. அந்த நாடுகளில் அரசாங்கத்தால் தனது சொந்த மக்களைப் பாதுகாக்க முடியாது' என்பதே அமெரிக்காவின் கருத்தாக இருந்து வருகிறது என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் தமரா குணநாயகம் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையைத் "தோல்வி கண்டநாடு' என்று பிரிட்டிஷ் வெளிவிவகார இணை அமைச்சர் ஜெரமி பிரௌவுனி முன்வைத்த வாதத்திற்கு பதிலளித்த தமரா குணநாயகம்,"பயங்கரவாத நாடுகள்'," போக்கிரி நாடுகள்' போன்ற கருத்தைக் கொண்டதே"தோல்வி கண்ட நாடு' என்பதாகும். இறைமையுள்ள நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு நியாயப்படுத்த இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேவ தூதரைப் போன்ற தார்மீக உணர்வைக் கொண்டிருப்பவரைப் போன்ற தோற்றப்பாட்டுடன் இந்தக் கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் வெளிவிவகார இணை அமைச்சர் ஜெரமி பிரௌனி இலங்கையை "தோல்வி கண்ட நாடு' எனக் குறிப்பிட்டிருப்பது நேரடியான குறிப்பாகும்.
அதேசமயம் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் (நவநீதம்பிள்ளை) தீங்கு விளையாத தன்மையைக் கொண்ட வார்த்தையைப் பிரயோகிக்கிறார். ஆனால், இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாளும் பகுதியில் அந்த அபாயகரமான கருத்தீட்டுடன் இணைந்ததாக பேச்சினிடையே வற்புறுத்தல் கொடுக்கிறார். தனது பிரஜைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கைக்கு இயலாமல் அல்லது விருப்பமில்லாமல் உள்ளது என்ற கருத்தை அவர் பரிந்துரைக்கிறார். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான தகைமையற்றவையாக இலங்கையின் நிறுவனங்கள் இருக்கின்றது என்றும் ஐ.நா. நிறுவனங்களுடன் நடவடிக்கைகளில் ஈடுபட இலங்கை மறுக்கின்றது என்ற கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார் என்றும் தமரா குணநாயகம் சாடியுள்ளார்.
ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் தாம் மேற்கொண்ட தலையீடுகளை நியாயப்படுத்தவே இந்த மாதிரியான வாதங்களை மேற்குலகு முன்வைத்திருக்கிறது என்றும் தமரா குறிப்பிட்டுள்ளார்.




6:48 AM
jana
Posted in: 

0 comments:
Post a Comment